பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 ፱፱. 箕, 邱T。 河町。 பிராம்மணனும்-குத்திரனும் tarch-4 அப்படியே ஆகட்டும். இரண்டாவது உம்முடன் இவ்விஷயத்தைப்பற்றி பேசும் பொழுது உமது கொள்கைக்கு விரோதமாக நான் ஏதா வது எடுத்துப்பேசினால், உம்மை நான் ஏதோ அலட்சி யம்செய்கிறேன் அல்லது அவமானம்செய்கிறேன் என்று எண்ணலாகாது-என் மனதிலிருப்பதை நான் தாராளமாக எடுத்துப்பேச உத்தரவு கொடுக்கவேண்டும். சீதாராமா, அப்படியேசெய். நீ பெரியவனுனபிறகு நமது தர்மசாஸ்திரப்படி நான் உன்னே என் தோழனு கவே பாவிக்கிறேன் என்பது நீ அறியாத விஷயமல்லவே. தோளுக்குமிஞ்சினல் தோழன்” என்னும் பழமொழியின் குணத்தை நான் என்.றும் மறந்தவனல்ல. நான் உன்னு டைய சிநேகிதன் என்று நினைத்துக்கொண்டுபேசு - தாராளமாக ! (அவர் கையை எடுத்து முத்தமிட்டு) அப்பா-எக்தெந்த ஜன் மத்திலும் நீரே என் தந்தையாக வாய்க்கவேண்டும் ! ஏனடா, நியாயத்தைச்சொல் என்ருல்-இந்த வழிக்கெல் லாம் போகாதே ! இல்லை இல்லை முதலில் உம்மை ஒருகேள்வி கேட்கப் போகிறேன்-என்னுடைய தாயாரை நீர் கலியாணம் செய்துகொள்ளாமல், உம்முடைய சிற்றப்பா உம்மை பலவந்தித்ததாக நீர் கூறிய-அந்த அம்மாள் பெயர் என்ன ?-அம்புஜமா ?-கலியாணமான ஒரு வருஷத் திற்கெல்லாம் தன் கணவனை விட்டு-தேசாந்திரம் போ ஞர்களென்று சொன்னரே, அந்த அம்மாளை-நீர் கலியா ணம் சொய்துகொள்ளும்படி நேரிட்டிருந்தால்-நீர் என்ன செய்திருப்பீர் உம்முடையகதி என்னவாயிருக் கும் உம்முடைய வாழ்வு எத்தகையதாயிருக்கும்: - ஏனடா ! இதையெல்லாம் உன்னே யார் ஞாபகம் வைத் துக்கொண்டிருக்கச் சொன்னது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/44&oldid=725779" இலிருந்து மீள்விக்கப்பட்டது