பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

独6 ፱ቨ. ffff. பிராம்மணனும்-சூத்திரனும் tsrفظٹا-A (படத்தின் பின்புறத்தைத் திருப்பிப்பார்த்து) மிஸ். கற்பகம் ஆஸ் (as) பங்கஜவல்லி!” சீதாராமா ! இப்படி--ே என்னை மோசம் செய்யலாமா ? அப்பா ! என்மீது கோபியா தீர்-நடத்ததைச் சொல் கிறேன்-பிறகு நான் உம்மை வேண்டுமென்று மோசம் செய்தேனே இல்லையோ என்பதை நீரே தீர்மானியும். (தன் நாற்காலிக்குப் போய் உட்கார்ந்து) என்ன அது ! இந்த இரண்டு படங்களையும் எனது இரண்டு ஜேபி களில் வைத்திருந்தேன். முதல் படத்தை எடுத்து உம்மிடம் கொடுத்தபொழுது அதுதான் கற்பகத்தின் படமென்றெண்ணி அதைப் பாாாது உம்மிடம் சத்திய நாராயண ஐயரின் பெண்ணின் படத்தை அகஸ்மாத் தாய்க் கொடுத்தேன். பிறகு நீர் அதைப்பற்றி விரோத மாகக் கூறியபொழுது ஆச்சரியப்பட்டேன். அப்பொ ழுதும் அதைப் பார்த்தவனன்று பிறகு இரண்டாம் படத்தைக் கொடுக்க நேர்ந்தபொழுது, அதை நீர் புக ழவே எனக்கு சந்தேக முண்டாச்சுது. நீர் முதற்படத்தி லிருக்கும் பெண் இருக்கிற நகைகளையெல்லாம் போட்டுக் கொண்டு படம் பிடித்திருக்கிருள் என்று குறிப்பிட்ட போது, நான் படங்களை மாருகக் கொடுத்திருக்கவுேண்டு மென்று அறிந்தவனுய், அவைகளை வாங்கிப் பார்த்த பொழுதுதான், இம்மாதிரி தவறு நேரிட்டு விட்டது என்று உண்மையை யறிதேன்-அப்பா ! நான் என்னே அறிந்த நாள் முதல் உம்மிடம் ஒரு பொய்யும் உரைத்தவ னன்று என்பதை நீரே அறிவித்தீர், ஆகவே இதுதான் சத்தியம் என்று நம்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளு கிறேன். ஆயினும் என்மீது என்ன குற்றம் என்பதை யும் சொல்லிவிடுகிறேன். பிறகு நீர் கற்பகத்தின் படத் தைக்காட்டி அவளை மணக்கவேண்டு மென்று என்னைக் கேட்டபோது, ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/52&oldid=725788" இலிருந்து மீள்விக்கப்பட்டது