பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-சூத் திரனும் 83 Efff, 母祇。 பிராம்மணர்கள் இடங்கொடுப்பதென்ன ? நீங்களாக அந்த ஸ்தானத்தை வகியுங்கள் எதோ இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் கல்வி பயிற்சியை அதிகமாய் மேற்கொண்டமையாலும், சில ஆசாரங்களை அனுஷ்டித் தகிலுைம், கல்வித்திறமும், ஒழுக்கமும் கொஞ்சம் இருப்பதாக எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிருர்கள். அவர்களைப்போல் மற்ற ஜாதியாரும் கல்விபயின்று, கல்லொழுக்கங்களை அனுசரித்து, அவர்களுக்கு சமான மாகவும், அவர்களுக்கு மேலாகவும் ஆகிறதுதானே ! இரண்டு பிரிவினர் சம்ானமாவதென்முல் இாண்டு மார்க் கங்களிருக்கின்றன ; ஒன்று, கீழே இருப்பவர் மேலிருப் பவர்களைத் தங்கள் ஸ்திதிக்கு இழியச் செய்யலாம் ; மற். ருென்று, கீழ் இருப்பவர்கள் மேலிருப்பவர்கள் ஸ்திதிக் குத் தங்களை உயர்த்திக்கொள்ளலாம். இதில் எது மேலானது எது தாழ்ந்தது என்று தாங்களே சொல்லுங் கள். (சற்று யோசித்து) இன்னுெருவழியில்லையா? மேலே இருப் பவர் கீழிருப்பவர்களைக் கைகொடுத்துத் தூக்கித் தங்கள் ஸ்திதிக்கு சமானமாக்கிக் கொள்ளலாகாதா ? செய்யலாம்! அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்! செய்தால் மிகவும் பெருங் தன்மையாயிருக்கும்! ஆயினும் செய்யமாட்டார்கள் ! அப்படிச் சமானமாக்கிக் கொண் டால் தாங்கள் இரண்டாயிரம் வருடங்களாக அனுப வித்த உயர்ந்த பதவியும் அதல்ை உண்டான பலவித லாபங்களும் அடியுடன் போய்விடுமல்லவா ? அதற்காகத் தாங்களாக அவர்கள் இதைச் செய்ய இசைவார்கள் என்று எண்ணுவது உலக சரித்திரங்களில் நாம் அறிந்த தற்கெல்லாம் விருத்தமாகும்-தற்காலம் ஆங்கிலேயாை, இந்தியர்களை உங்களுக்குச் சமானமாகப் பாவியுங்கள், நீங்களே அவர்களை உங்களுக்குச் சமானமாக்கிக் கொள் ளுங்கள், என்ருல் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று கனவிலும் கினேக்கிறீர்களா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/89&oldid=725828" இலிருந்து மீள்விக்கப்பட்டது