பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

243ஏ. வரிகளை விதிப்பதற்கு ஊராட்சிகளுக்குள்ளஅதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள்:

ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால், அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படலாகும்.-

(அ) அத்தகைய நெறிமுறைக்கிணங்கவும், வரம்புகளுக்குட்பட்டும் வரிகள், தீர்வைகள், சுங்கவரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஊராட்சிக்கு அதிகாரமளிக்கலாம்;

(ஆ) அத்தகைய நோக்கங்களுக்காகவும், வரைக்கட்டுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டும் மாநில அரசால் விதித்து வசூலிக்கப்படும் வரிகள், தீர்வைகள், சுங்கவரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை ஊராட்சிக்குக் குறித்தளிக்கலாம்;

(இ) மாநிலத்தின் திரள்நிதியத்திலிருந்து ஊராட்சிகளுக்கு உதவி மானியங்கள் வழங்குவதற்கு வகை செய்யலாம்; மற்றும்

(ஈ) முறையே ஊராட்சிகளால் அல்லது அதன் சார்பாக, பெறப்பட்ட பணங்கள் அனைத்தையும் வரவு வைப்பதற்காகவும், அதிலிருந்து பணங்களைத் திரும்பப் பெறுவதற்காகவும் நிதியங்களை அமைப்பதற்கு வகை செய்யலாம்.

243ஐ. நிதிநிலையை மறுஆய்வு செய்ய நிதி ஆணையத்தை அமைத்தல் :

(1) ஒரு மாநில ஆளுநர், 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து மூன்றாம் திருத்தச்) சட்டத்தின் தொடக்க நிலையிலிருந்து ஓராண்டிற்குள் கூடிய விரைவிலும், அதற்குப் பின்பு ஒவ்வோர் ஐந்தாவது ஆண்டு முடிவிலும், ஊராட்சிகளின் நிதி நிலையை மறு ஆய்வு செய்வதற்கும்,-

(அ)

(i) இந்தப் பகுதியின்படி மாநிலத்திற்கும் ஊராட்சிகளுக்கும் இடையே பிரித்தளிக்கப்படலாகிறதும் மாநிலத்தால் விதிக்கத்தக்கதுமான வரி, தீர்வைகளின், சுங்க வரி மற்றும் கட்டணங்களின் நிகரத்தொகையை மாநிலத்திற்கும் ஊராட்சிகளுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதையும், அந்தத் தொகைகளில் அவற்றிற்குரிய பங்குகளை அனைத்து நிலைகளிலும் ஊராட்சிகளிடையே பகிர்ந்தொதுக்குவதையும்;

(ii) ஊராட்சிகளுக்குக் குறித்தளிக்கப்படலாகும் அல்லது அதனால் பயன்படுத்தப்படலாகும் வரிகள், தீர்வைகள், சுங்க வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதையும்;

(iii) மாநிலத் திரள் நிதியத்திலிருந்து ஊராட்சிகளுக்கான மானியங்களையும்

உட்படுத்துகிற நெறிகள்;

(ஆ) ஊராட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள்;

(இ) ஊராட்சிகளின் சீரான நிதிநலன் கருதி ஆளுநரால் நிதி ஆணையத்திற்குக் குறித்தனுப்பப்படும் பிற பொருட்பாடு எதுவும்


குறித்து ஆளுநருக்குப் பரிந்துரைகள் செய்வதற்கும் நிதி ஆணையம் ஒன்றை அமைத்தல் வேண்டும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றம், ஆணையத்தின் கட்டமைப்பு, அதன் உறுப்பினர்களாக அமர்த்தப்படுவதற்குத் தேவைப்படும் தகுதிப்பாடுகள், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை ஆகியவற்றிற்குச் சட்டத்தின் வழி வகை செய்யலாம்.

(3) ஆணையம், தன் நடைமுறைகளைத் தீர்மானித்தல் வேண்டும், மற்றும் தன் அலுவற்பணிகளை ஆற்றுகையில் மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால் அதற்கு வழங்கலாகும் அதிகாரங்களை உடையது ஆகும்.31-4-32a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/127&oldid=1465943" இலிருந்து மீள்விக்கப்பட்டது