பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170


அற்றுப்போகும், எனினும் அவ்வாறு அச்சட்டம் செல்திறம் அற்றுப் போவதற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எதுவும் பாதிக்கப்படுவதில்லை:

வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை இந்திய ஆட்சிநிலவரையின் ஒரு பகுதியில் மட்டுமே செயற்பாட்டில் இருக்குமிடத்து, அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலுள்ள இந்திய ஆட்சிநிலவரையின் அப்பகுதியில் நடைபெறும் அல்லது அதன் தொடர்பாக நடைபெறும் செயல்களால், இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து எழுமாயின், அவ்வாறு எழும் அளவிற்கு, அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இல்லாதிருக்கிற மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றில் அல்லது அதன் பகுதி எதிலும் அல்லது அதன் தொடர்பாக, இந்த உறுப்பின்படி அத்தகைய சட்டம் எதுவும் இயற்றப்படலாம்; அல்லது அத்தகைய ஆட்சித் துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படலாம்.

(1ஆ), (1அ) கூறில் உள்ள எதுவும்—

(அ) ஒரு சட்டம் இயற்றப்படும்போது செயற்பாட்டிலிருக்கும் நெருக்கடிநிலைச் சாற்றாணைக்கு அச்சட்டம் தொடர்புடையது என்ற ஒரு வாசகத்தினைக் கொண்டிராத அத்தகைய சட்டம் எதற்கும், அல்லது
(ஆ) அத்தகைய வாசகத்தினைக் கொண்டிருக்கும் ஒரு சட்டத்தின்படி அல்லாமல் பிறவாறு மேற்கொள்ளப்பட்ட ஆட்சித் துறை நடவடிக்கை எதற்கும்

பொருந்துறுவதில்லை.

(2) மேற்சொன்னவாறு பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணை, இந்திய ஆட்சி நிலவரை முழுவதையுமோ அதன் பகுதி எதனையுமோ அளாவி நிற்கலாம்:

வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை இந்திய ஆட்சிநிலவரையின் ஒரு பகுதியில் மட்டுமே செயற்பாட்டிலிருக்குமிடத்து, அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலுள்ள இந்திய ஆட்சிநிலவரையின் அப்பகுதியில் நடைபெறும் அல்லது அதன் தொடர்பாக நடைபெறும் செயல்களால் இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து எழுந்துள்ளதெனக் குடியரசுத்தலைவர் தெளிவுறக்கண்டு, அத்தகைய ஆணை எதனையும் இந்திய ஆட்சிநிலவரையின் பிற பகுதி எதற்கும் அளாவச் செய்வது அவசியமெனக் கருதினாலன்றி, அந்த ஆணை அத்தகைய பிற பகுதி எதனையும் அளாவி நிற்காது.

(3) (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடுமான விரைவில், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் முன்னிடப்படுதல் வேண்டும்.

[1][359அ. ★★]


  1. 1989 ஆம் ஆண்டு அரசமைப்பு (அறுபத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தினால் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/196&oldid=1469039" இலிருந்து மீள்விக்கப்பட்டது