பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


20. பழங்குடியினர் வரையிடங்கள்:

(1) கீழ்க்கண்ட அட்டவணையிலுள்ள 1, II, IIஅ, 111 ஆகிய பகுதிகளில் குறித்துரைக்கப் பட்டுள்ள வரையிடங்கள், முறையே அசாம் மாநிலம், மேகாலயா மாநிலம், திரிபுரா மாநிலம், மிசோரம் மாநிலம் ஆகியவற்றில் உள்ள பழங்குடியினர் வரையிடங்களாக இருக்கும்.

(2) கீழ்க்கண்ட அட்டவணையின் 1 ஆம் பகுதியில், 11 ஆம் பகுதியில் அல்லது IITஆம் பகுதியில், மாவட்டம் பற்றிய சுட்டுகை எதுவும், 1971 ஆம் ஆண்டு வடகிழக்கு வரையிடங்கள் (மறு அமைப்பு) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (ஆ) கூறின்படி குறித்திடப்பட்ட நாளை ஒட்டிமுன்பு நிலவிவந்த அதே பெயரை உடைய தன்னாட்சி மாவட்டத்திற்குள் உள்ளடங்கியிருக்கும் ஆட்சிநிலவரைகள் பற்றிய சுட்டுகை எனப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: இந்த இணைப்புப்பட்டியலின் 3 ஆம் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் (உ), (ஊ) ஆகிய கூறுகள், 4 ஆம் பத்தி, 5ஆம் பத்தி, 6 ஆம் பத்தி, 8 ஆம் பத்தியின் (2) ஆம் உள்பத்தி, (3) ஆம் உள்பத்தியின் (அ), (ஆ), (ஈ) ஆகிய கூறுகள், (4) ஆம் உள்பத்தி, 10 ஆம் பத்தியின் (2) ஆம் உள்பத்தியின் (ஈ) கூறு ஆகியவை பொறுத்து, ஷில்லாங் நகராட்சியில் உள்ளடங்கியிருக்கும் வரையிடத்தின் பகுதி எனவும் காஸிக் குன்றுகள் மாவட்டத்திற்குள் உள்ளதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) கீழ்க்கண்ட அட்டவணையில் IIஅ பகுதியில் "திரிபுரா பழங்குடியினர் வரையிடங்கள் மாவட்டம்” என்னும் சுட்டுகை, 1978 ஆம் ஆண்டு திரிபுரா பழங்குடியினர் வரையிடங்கள் தன்னாட்சி மாவட்ட மன்றச் சட்டத்தின் முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் வரையிடங்களை உள்ளடக்கிய ஆட்சிநிலவரையைச் சுட்டுவதாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

அட்டவணை

பகுதி I

  1. வட கச்சார் குன்றுகள் மாவட்டம்.
  2. கார்பி ஆங்குலாங்கு குன்றுகள் மாவட்டம்.
  3. [1][போடோலாந்து ஆட்சிநிலவரையிடப் பகுதிகள் மாவட்டம்]

பகுதி II

  1. காஸிக் குன்றுகள் மாவட்டம்.
  2. ஜயந்தியா குன்றுகள் மாவட்டம்.
  3. காரோ குன்றுகள் மாவட்டம்.

பகுதி IIA

திரிபுரா பழங்குடியினர் வரையிடங்கள் மாவட்டம்.

பகுதி III

  1. சக்மா மாவட்டம்.
  2. மாரா மாவட்டம்.
  3. லயீ மாவட்டம்.

  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியல் (திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/259&oldid=1466521" இலிருந்து மீள்விக்கப்பட்டது