பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243


92ஆ. சரக்குகளின் அனுப்புகை (அனுப்புகைசெய்பவருக்காயினும் பிற எவருக்காயினும்) மாநிலங்களிடையேயுள்ள வணிகத்தின் அல்லது வாணிபத்தின் போது நிகழுமிடத்து, அத்தகைய சரக்குகளை அனுப்புகையின் மீதான வரிகள்.
[1][92இ. பணியங்களின் மீதான வரிகள்.]
93. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்.
94. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளின் நோக்கத்திற்கான விசாரணைகள், அளவை ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்.
95. இந்தப் பட்டியலில் உள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்து, உச்ச நீதிமன்றம் தவிர, அனைத்து நீதிமன்றங்களுக்குமான அதிகாரவரம்பும் அதிகாரங்களும்; கடலாண்மை அதிகாரவரம்பு.
96. இந்தப் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த கட்டணங்கள், ஆனால் இவற்றில் நீதிமன்றம் எதிலும் பெறப்படும் கட்டணங்கள் நீங்கலாக.
97. 11ஆம் பட்டியலில் அல்லது IIIஆம் பட்டியலில் குறிப்பிடப்பட்டிராத வரி எதுவும் உள்ளடங்கலாக, அவ்விரு பட்டியல்களில் எதிலும் எண்ணிடப்பட்டிராத பிற பொருட்பாடு எதுவும்.

பட்டியல் 11-மாநிலத்துப் பட்டியல்

1. பொது ஒழுங்கமைதி (ஆனால், கடல், தரை அல்லது வான் படை எதனையும் அல்லது ஒன்றியத்தின் பிற ஆயுதப்படை எதனையும் அல்லது ஒன்றியத்தின் கட்டாள்கைக்கு உட்பட்ட பிற படை எதனையும் அல்லது அதன் படைப்பிரிவு அல்லது உறுப்பு எதனையும் குடியியல் அதிகாரத்திற்கு உதவும் வகையில் பயன்படுத்துவது இதில் உள்ளடங்காது.)
2. காவல்படை (இருப்பூர்தியக் காவல்படை மற்றும் கிராமக்காவல் படை உள்ளடங்கலாக) 1ஆம் பட்டியலின் 2அ பதிவின் வகையங்களுக்கு உட்பட்டதாகும்.
3. உயர் நீதிமன்றத்தின் அலுவலர்களும் பணியாளர்களும்; குத்தகை மற்றும் வருவாய்த்துறை நீதிமன்றங்களில் நெறிமுறை; உச்ச நீதிமன்றம் நீங்கலாக, பிற நீதிமன்றங்கள் அனைத்திலும் பெறப்படும் கட்டணங்கள்.
4. சிறைகள், சீர்திருத்த நிலையங்கள், இளங்குற்றவாளிகள் சீர்திருத்த நிறுவனங்கள் மற்றும் இவை போல்வதான பிற நிறுவனங்கள்; அவற்றில் காவலில் வைக்கப்படுபவர்கள்; சிறைகள், பிற நிறுவனங்கள் இவற்றைப் பயன்படுத்துவதற்குப் பிற மாநிலங்களுடனான ஏற்பாடுகள்.
5. உள்ளாட்சி, அதாவது, உள்வரைத் தன்னாட்சியின் அல்லது ஊராட்சியின் நோக்கமைந்த மாநகராட்சிகள், மேம்பாட்டுப் பொறுப்பமைவுகள், மாவட்டக் கழகங்கள், சுரங்கக் குடியிருப்பு அதிகாரஅமைப்புகள், பிற உள்ளாட்சி அதிகாரஅமைப்புகள் ஆகியவற்றின் அமைப்பும் அதிகாரங்களும்.
6. மக்கள் நல்வாழ்வும் துப்புரவும்; மருத்துவமனைகளும் மருந்தகங்களும்.
7. புனிதப்பயணங்கள், இந்தியாவுக்கு வெளியேயுள்ள பிற இடங்களுக்கான புனிதப்பயணங்கள் நீங்கலாக.
8. வெறியூட்டும் மதுக்குடிவகைகள், அதாவது, வெறியூட்டும் மதுக்குடி வகைகளை உண்டாக்குதல், உற்பத்திசெய்தல், உடைமையில் வைத்திருத்தல், கொண்டுசெல்லுதல், கொள்வினை மற்றும் விற்பனை.
9. ஊனமுற்றோர்களுக்கும் வேலையமர்த்தம்பெற இயலாதவர்களுக்கும் தீருதவி. 10. புதைத்தலும் இடுகாடுகளும்; எரியூட்டுதலும் சுடுகாடுகளும்.
[2][11. ★★]


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து எட்டாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  2. 1976ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தினால் (3-1-1977 முதல் செல்திறம் பெறுமாறு) 11ஆம் பதிவு விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/269&oldid=1466807" இலிருந்து மீள்விக்கப்பட்டது