பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

37. 1960 ஆம் ஆண்டு ஜன்மீகரம் செலுத்தம் (ஒழிப்பு) சட்டம் (கேரளச் சட்டம் III/1961).
38. 1961 ஆம் ஆண்டு கேரள நிலவரிச் சட்டம் (கேரளச் சட்டம் XIII/1961).
39. 1963 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (கேரளச் சட்டம் I/1964).
40. 1959 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச நில வருவாய்த் தொகுப்புச்சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் XX/1959).
41. 1960 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைபற்று நிலங்கள் மீதான உச்சவரம்புச் சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் XX/1960).
42. 1955 ஆம் ஆண்டு சென்னை பயிரிடும் குத்தகைக்காரர்கள் பாதுகாப்புச் சட்டம் (சென்னைச் சட்டம் XXV/1955).
43. 1956 ஆம் ஆண்டு சென்னை பயிரிடும் குத்தகைக்காரர்கள் (நியாயமான குத்தகைத் தொகைச் செலுத்தம்) சட்டம் (சென்னைச் சட்டம் XXIV/1956).
44. 1961 ஆம் ஆண்டு சென்னைக் குடியிருப்புக் கையுடைமையாளர்கள் வெளியேற்றுகையிலிருந்து பாதுகாப்பு) சட்டம் (சென்னைச் சட்டம்
XXXVIII/1961).
45. 1961 ஆம் ஆண்டு சென்னைப் பொதுப் பொறுப்பமைவுகள் (வேளாண் நிலங்களை நிருவகிப்பதை ஒழுங்குறுத்துதல்) சட்டம் (சென்னைச் சட்டம் LVII/1961).
46. 1961 ஆம் ஆண்டு சென்னை நிலச் சீர்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பு நிருணயித்தல்) சட்டம் (சென்னைச் சட்டம் LVIII/1961).
47. 1952 ஆம் ஆண்டு மைசூர் குத்தகையுரிமைச் சட்டம் (மைசூர் சட்டம் XIII/1952).
48. 1957 ஆம் ஆண்டு குடகு குத்தகைக்காரர்கள் சட்டம் (மைசூர் சட்டம் XIV/1957). 49. 1961 ஆம் ஆண்டு மைசூர் ஊர் அலுவலர் பதவிகள் ஒழிப்புச் சட்டம் (மைசூர் சட்டம் XIV/1961).
50.1961 ஆம் ஆண்டு ஐதராபாத் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (செல்லுந்தன்மையதாக்குதல்) சட்டம் (மைசூர் சட்டம் XXXVI/1961).
51. 1961 ஆம் ஆண்டு மைசூர் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (மைசூர் சட்டம் X/1962). 52. 1960 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (ஒரிசாச் சட்டம் XVI/1960).
53. 1963 ஆம் ஆண்டு ஒரிசா ஒருங்கிணைந்த ஆட்சிநிலவரைகள் (ஊர் அலுவலர் பதவிகள் ஒழிப்பு) சட்டம் (ஒரிசாச் சட்டம் X/1963).
54.1953ஆம் ஆண்டு பஞ்சாப் நிலப்பிடிமான முறைகள் காப்புறுதிச் சட்டம் (பஞ்சாப் சட்டம் X/1953).
55. 1955 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமைச் சட்டம் (ராஜஸ்தான் சட்டம் III/1955).
56. 1959 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஜமீன்தாரி மற்றும் விஸ்வேதாரி ஒழிப்புச் சட்டம் (ராஜஸ்தான் சட்டம் VIII/1959).
57. 1960 ஆம் ஆண்டு ஹுமாயூன் மற்றும் உத்தரகண்ட் ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் XVII/1960).
58. 1960 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச கைபற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு விதித்தல் சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் I/1961).
59. 1953 ஆம் ஆண்டு மேற்கு வங்காள உரிமை நிலச் சொத்துகள் கையகப்படுத்துதல் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் I/1954).
60. 1955 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் X/1956).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/279&oldid=1466857" இலிருந்து மீள்விக்கப்பட்டது