பக்கம்:Harischandra.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஹரிச்சந்திான் (அங்கம்.5 சந்திரமதி!-தீண்டாதே என்னே !-எழுந்திரு! அகன்று நில்! காதா!-ாதா !-அரசன் குழந்தையைக் கொன்ற அப்படிப் பட்ட கொடும் பாதகி-நான் என்று, நீரும் நம்புகிறீரா?அதை கினேக்கவும் என் நெஞ்சம் இடங் கொடுக்கவில்லையே! என் கையால்-எப்படி-அப் பாதகம் இழைத்திருப்பேன் ? --காதா உம்முடைய மனைவியாகிய நான்-அவ்வளவு இழிக் தவளாய் விடுவேனே -இதை நீர் நம்புகிறீரா?-ஈசனே ! ஈசனே!--என்னுல் பொறுக்க முடியவில்லையே - (தேம்பி அழுகிருள்.) சந்திரமதி !-எப்படி இக் கதிக்கு வந்தாய் ?-விரைவில் உண்மையை உரை. பிராணநாதா ! ஆகாயவாணி பூமிதேவி சாட்சியாகவும், அப் பரமேஸ்வரன் சாட்சியாகவும், நடந்ததை நடந்தபடி உரைக்கி றேன். நான் சொல்வதில் அணுவளவேனும் அசத்யம் இருக்கு மாயின், பதிவிரதைகள் செல்லும் பரமபதம் எனக்குக் கிட் டாது, பாழ் காகில் பால்கோடி நூற்ருண்டு கிடக் துழல்வே கை!-காதா, உம்மை நான் நேற்றிரவு விட்டுப் பிரிந்தபின், வேதியர் வீட்டிற்கு விரைந்து சென்றேன். கருக்கிருட்டில் நேர்வழி தெரியாது பலவிதிகளில் அலைந்துசென்றேன். கடை சியில் ஒரு விதிவழியாகப் போகும்பொழுது,என்காலில் ஏதோ தடைப்பட, என்னவென்று உற்றுப் பார்க்க, ஏதோ குழந்தை உறங்குவதுபோ லிருந்தது, அதன் முகம் கமது-தேவதாச னது முகத்தை ஒத்திருக்க-என்ன ஆச்சரியமென்று திகை த்து கின்றேன். அச் சமயம் சில காவலாளர்கள் ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார்கள் ; அதுவரையில் எனக்கு நன்ருய் ஞாபகம் இருக்கிறது. அதற்கப்புறம் கடந்தது ஏதோகனவுபோ லிருக்கிறதே. யொழிய, கனவாகத் தோற் றப்படவில்லை. பிறகு இத் தேசத்து அாசன், தன் குழந்தை யை நான் கொன்றதாகவும், அக் குற்றத்திற்காக எனக்கு சிா சாக்கின விதித்ததாகவும் கூறினபொழுதுதான் எனக்குப் பூர ணமான பிரக்ஞை வந்தது. அதன்மேல் இங்கு உமதெதிரா கக் கொண்டுவரப்பட்டேன். பிராணநாதா, நீர் தெய்வமாகக் கொண்டு தொழுதுவரும் அந்த சத்யத்தின்மீது ஆணையிட்டுச்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/106&oldid=726766" இலிருந்து மீள்விக்கப்பட்டது