பக்கம்:Harischandra.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் El இம். அதுவும் கோரமானதே கனவில் உன்னேயன்றி இன்னும் இாண்டு மனவியர் எனக்கு இருந்தது பேர்லும் கண்டேன். அவர்களுள் ஒருத்தி குரூரமான ஓர் சாட்சசனல் என்னிடி மிருந்து அபகரிக்கப்பட்டாள். கண்மணி, யுேம் என்ன விட்டுப் பிரியும்படி சேர்ந்தது; மற்ருெருத்தி மாத்திரம் என்ன விட் டகலா திருந்தாள்; பிறகு நான் எண்ணுதற்கரிய இன்ன் லிற்பட்டு, கடைசியில் மறுபடியும் உங்களிருவரையும் பெற்று நற்கதி யடைந்ததாகக் கனவு க்ண்டேன். அக்தோ! பிராணாதா! இக் கனவு இனி வரப்போகிறதைக் குறிக்கிறதோ ? கண்மணி, எனது ராஜ்யத்தையு. மிழந்து, உன்னேயும் விட்டுப் பிரிந்து, பல துன்பங்கள் நான் அனுபவிக்க வேண்டி வரும்போ லிருக்கிறது ; ஆயினும் எனது சத்ய விரதத்தினின் அறும் நான் பிறழேன். முடிவில் பரமேஸ்வரன் கருணையிஞ்ல் எனது ாக்யத்தையும் உன்னேயும் பெறுவேன் என்றெண்ணு கிறேன். என்ன இடுக்கணுற்றபோதிலும் இறுதியிலாவது இச் சுகத்தை நான் அடைவேகை அப் பர்மன் அருளால்! அந்தோ பிராணநாதா ! உமது கனவு உண்மையாய் முடியுமா யின், விவாகமாகியபின் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாத நான், உம்மை விட்டு நான் எத்தனை காலம் பிரிந்திருக்க வேண்டுமோ ? உம்மைக் கானது நான் இவ்வுலகில் ஒரு நாளேனும் உயிர் வாழ்வேனே ? கண்மணி, கவலைப்படாதே, கண்ணிரைத் துடைத்துக்கொள். கனவின்படி நடந்தேறக் கடவுளின் இச்சையானலும், கடைசி யில் நாமிருவரும் ஒருங்கு சேர்வோமல்லவா ? அதை கினேந்து உன் மனதைத் தேற்றிக்கொள். அன்றியும் இதில் நாம் முக்கியமாகச் சந்தோஷப்படவேண்டிய விஷயம் ஒன்றிருக் கிறது. என்ன கஷ்டத்திற் குட்பட்டபோதிலும், நாம் மேற் கொண்ட சத்ய விரதத்திற்கு பங்கம் நேரிடாதல்லவா? பா மேஸ்வான் நம்மீது அவ்வளவு அருள் புரிவதற்காக அவரது பாதாாவிந்தத்தை அனுதினமும் நாம் போற்றவேண்டு மல் லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/17&oldid=726782" இலிருந்து மீள்விக்கப்பட்டது