பக்கம்:Harischandra.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சத். சத். சத். ஹரிச்சந்திான் (அங்கம்.2 தளரவில்லை. வேட்டையாடவாட அதிலுள்ள உற்சாகம் அதி கரிக்கிறதே யொழிய குறைகிற கில்லே.-அதுவும் நமது பிர ஜைகளின் நலத்தைக் கோரிச் செய்யும்பொழுது. ஆம், அப்படித்தா னிருக்கவேண்டும். இல்லாவிடின் அக் காட் டுப்பன்றியை காட்டில் கறடு முறடு பாராமல், அது கொல்லப் படும் வரையில், கடுந்துாரம் பின்தொடர்ந்து தாம் சென்ற தற்கு, வேறு என்ன காரணம் கூறக்கூடும் நான் சி ஆம், அப்பன்றி என்னத் தொலைதுாரம் பின்தொடாச்செய் தது ; இதுவரையில் நான் வேட்டையாடிய பன்றிகளைப்போல் அல்லாமல், அத்தனே வேகமும் பலமும் அதற்கெங்கிருத்து வந்ததோ தெரியவில்லை. - - அண்ணலே, வேறு ஏதாவது போசுவோம் அக் கடும் பன்றி யைப்பற்றி நினத்தாலும் என் மயிர்க்குச்செறிகிறது ! சத்யகீர்த்தி, நீயும் மிகவும் களைத்திருக்கிருய், சயனித்துக் கொள் ஒருபுறமாக-களைத்த உடம்பிற்கு இளைப்பாறுதல் இன்னமுதம்போல் தேற்றம் ஒளவுதமாம். சத்யகீர்த்தி, என்ன நகைக்கிருய் ? அண்ணலே, அரண்மனையில் அம்சதுரளிகா மஞ்சத்தின் மீது சயனிக்கும் தாங்கள் இவ்வற்ப புல் தரையில் சயனிக்கும்படி கேரிட்டதே என்று யோசிக்கிறேன். இவ்விரண்டிற்கும் உள்ள தாாகம்யம் தாங்கள் அறியவேண்டி யிருந்தது போலும். அப்பா சத்யகீர்த்தி, இதல்ை ஏதாவது கஷ்டப்படுகிறேன் என்று எண்ணுகிருயா என்ன ? அப்படி யொன்றுமில்லை. பஞ்சணேtது படுப்பதும் பசும்புற் றரைமீது படுப்பதும் எனக்கு ஒரே சுகத்தைத்தான் கொடுக்கின்றன. சுகமும் துக்கமும் இவ் வுலகில் வெளிப்பொருள்களா லொன்றுமில்லை, உள்ளுக்குள்ளே யிருக்கும் உள்ளத்தைப் பொறுத்ததாம். மனமானது பருக்காங்கற்களையும் பஞ்சணையைப்போல் மிருது வாக்கும்; பஞ்சணையையும் கற்பாறைகளைப்போல் கடின மாக்கும். அன்றியும், காலை முதல் கஷ்டப்பட்டு ஜீவித்து, கடும் கிசியில் கட்டாக் தரையில் படுத்துறங்கும் கூலியாளுடைய சுகம், பட்டு வஸ்திரங்கள் பரப்பப்பட்ட பஞ்சணமீது படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/24&oldid=726789" இலிருந்து மீள்விக்கப்பட்டது