பக்கம்:Harischandra.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திான் 19 துறங்கும் கொற்றவனுடைய சுகத்தைப் பார்க்கிலும் குறைந்த பாடென் றெண்ணுதே! ஒரு விதத்தில் அணிமுடி யணித்த அாசன் அதிக கவலையினல் அயர்த் துறங்குவது கடினம்'; உள்ளத்தில் கவலையின்றி உறங்குவான் நிம்மதியாய் அக் கூலியாள். பிரதான் மறுபடி வருகிருன். uᏡ. ராஜாதிராஜனே, சிபிாம் சித்தமாய்விட்டது-கட்டழகுடை இரண்டு கன்னியர் ஏதோ தங்களைக் காணவேண்டுமென்று விரும்பி, அதோ தூரத்தில் காத்திருக்கின்றனர். சத். அரசர் மிகவும் அலுப்படைக்கிருக்கிருர், ஆகவே அவர்களைப் பார்ப்பதற்கு இது சமயம் அல்லவென்று சொல்லும், போம். ஹ. அப்படியல்ல, சத்யகீர்த்தி, அவர்கள் வாட்டும். அவர்கள் என்னேக் காணவேண்டி நெடுந்துாரமிருந்து வந்திருக்கவேண் டும். என்ன குறையோ அவர்களுக்கு, அதை விசாரிப்பது நம்முடைய கடமையன்ருே?-பிரதான், அவர்களை அழைத்து Ø]ff. |பிரதான் போகிருன்) சத், கன்னியர் தம்மைக் காணவேண்டி காட்டில் இத்தன தாசம் என்னமாகக் கடந்து வந்தார்கள் ? இங்கு நீர் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது ? பிாதான் இாண்டு கன்னிகையர்களே அழைத்துக்கொண்டு வருகிமு ன். கன்னிசைகள் அாசனை வணங்குகிமுர்கள். ஹ. கன்னியர்கrள், நீங்கள் யாரோ எவ்விடமிருந்து வருகிறீர் கள் ? காட்டில் இத்தனை தூரம் என்னைக் காணவேண்டிக் கடந்துவரவேண்டிய காரணமென்ன ? என்னிடம் சொல்லக் கூடிய குறை யேதேனும் இருந்தால் சொல்லுங்கள். மு.க. மன்னர் மன்னனே! எங்கள் மனத்தில் குறையொன்றுமில்லை. மன்னர் மன்னனுகிய தாங்கள் செங்கோல் நடாத்தும்பொழுது மண்ணுலகில் யாருக்கு என்னகுறை யிருக்கப் போகிறது ? நாங்கள் பாத சாஸ்திரம் நன்குணர்ந்த பாவையர், அதில் எங்களுக்குள்ள சாமர்த்தியத்தை உங்களுக்குக் காண்பித்து, உம்மைச் சந்தோஷிப்பிக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/25&oldid=726790" இலிருந்து மீள்விக்கப்பட்டது