பக்கம்:Harischandra.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரிச்சந்திரன் (அங்கம்-2 கை. ஆகவே, அவ்வாறு செய்ய அடியேங்களுக்கு விடை யளிக்க வேண்டுமென்று வேண்டுகிருேம். ராஜாதிராஜனே, போஜனம் சித்தமாவதற்கும் கொஞ்சம் கால மாகும். சரி, ஆல்ை, உங்கள் இஷ்டப்படியே செய்யலாம். [கன்னிகைகள் கர்ணுயிர்தமான ஒரு பாட்டைப்பாடி அபிநயம் பிடிக்கின்றனர்.) நல்லது நல்லது மிகவும் நல்லது இப்படிப்பட்ட கர்ணு மிர்தமான கானத்தை இதுவரையில் நான் கேட்டதேயில்லை ; மிகவும் நன்ருயிருக்கிறது ! (கன்னியர் ஒர் பதம்பாடி கடிக்கின்றனர்.) சபாஷ் சபாஷ் மிகவும் சந்தோஷ மாச்சுது போதும் நிறுத் துங்கள்; நீங்கள் எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்குத் தக்கபடி கைம்மாறு செய்ய தத்சமயம் அசக்தனுயிருக்கிறேன். ஒரு சமயம் நீங்கள் அயோத்திக்கு வரும்படி யிருந்தால் அப் பொழுது உங்கள் வித்தைக்கேற்ற பரிசளிப்பேன். ஆயினும் சத்யகீர்த்தி, இவர்களை வெறுங்கையுடன் அனுப்பலாகாது. ஆகவே இவர்களிருவருக்கும் நம்முடன் கொண்டுவந்திருக்கும் பொன்னில் ஆயிரம் பொன் கொடுத்தனுப்புவாய்சாஜாதிராஜனே, பொன்னே விரும்பி நாங்கள் உம்மிடம் வர வில்லை. மற்ற மனிதர்கள் எமக்களித்த பொன் எம்மிடம் அபரிமிதமாய் இருக்கிறது. கொற்றவன் கொடுக்கும்படியான பரிசைக் கோரியே, நாங்கள் உம்மை நாடினுேம். அது என்னவோ ? உமது பூ சக்ாக்குடையை எமக்குப் பரிசாக அளிக்கவேண்டு கிருேம். கன்னியர்காள்! நீங்கள் கேட்பது இன்னதென்று நீங்களே நன்ரு யறிகிலீர் போலும், அதைவிட நான் அணியும் முடி யினைக் கேட்டிருக்கலாமே ! சக்ரவர்த்தியா யுள்ளவன் தான் அணியும் முடியினையும், தனது சத்ரத்தையும், பரிசாகக் கொடுக்கலாகாது. ஆகவே, நீங்கள் கேட்பதைக் கொடுக்க என்னுல் ஏலாது ; உங்களுடைய அந்தஸ்திற்குத் தக்கபடியா யும், நான் கொடுக்கக் கூடியதாயும், ஏதாவது கேளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/26&oldid=726791" இலிருந்து மீள்விக்கப்பட்டது