பக்கம்:Harischandra.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) ஹரிச்சந்திான் 35 நான்காம் காட்சி. இடம்-அயோத்தியின் எல்லைப்புறம்: ஹரிச்சந்திான், சந்திரமதி, தேவதாசன், அற்ப உடை - யணிந்து வருகின்றனர். சத்தியகீர்த்தி முதலிய மந்திரிப் பிரதானிகள், நகரமாந்தர், அழுதவண்ணம் பின் தொடர்கின்றனர். ஜனங்கள். எம்மிறையே எம்மிறையே! நாங்கள் இப் பாழும் நாட் டில் இனி இருக்கமாட்டோம்! இருக்கம்ாட்டோம்! நாங் களும் உங்களுடன் வந்து விடுகிருேம் வந்து விடுகிருேம் ! ஹ. கண்பர்களே, அது கியாயமல்ல உமதாசனுகிய விஸ் வாமித்திரர், உங்களுக்கெல்லாம் இந் நாட்டெல்லை வரையில் சென்று வழிவிட்டு வரலாமென்று உத்தரவளித்திருக்கிரு.ர். அந்தக் கட்டளையை நீங்கள் மீறி நடப்பது தர்மமல்ல.-- இதோ, இந்நாட்டெல்லைக்கு வந்துவிட்டோம்-ஆகவே நீங்க ளெல்லாம் தயவுசெய்து திரும்பிப் போங்கள்.-அப்பா, சத் பகீத்தி, இவர்களையெல்லாம் அழைத்துச் செல் .ே ஜன. அந்தோ! அந்தோ, தாய் தந்தையரைப்போல எம்மைக் காத்துரட்சித்த உம்மைவிட்டு நாங்கள் எப்படிப் பிரிந்து போவோம் ! எப்படிப் பிரிந்து போவோம் ! ஹ. நண்பர்களே, துக்கப்படாதீர்கள், விஸ்வாமித்திர மஹரிஷி அரசாா யிருந்தவர். பிரஜைகளைப் காப்பது அவர் அறியாத விஷயமன்று. ஆகவே இனி நீங்கள் விடைபெற்றுக் கொள்ளுங் கள். ஆடவர். |ஹரிச்சந்திரன் பாதம் பணிந்து அண்ணலே - அண்ணலே ! நாங்கள் விடைபெற்றுக் கொள்ளுகிருேம் ! உமது திருமுக தரிசனம் இனி என்றுகிட்டுமோ ஸ்திரிகள். சந்திரமதியைப் பணிந்த தாயே! தாயே! எங்களைக் காப் பாற்றுவார் யாரினி? எங்களைக் காப்பாற்றுவார் யாரினி ? உம்மோடு இந்த ராஜ்ய லட்சுமி போய் விடுகிறதே! போய் விடுகி றதே! சிறுவர்கள். அப்பா தேவதாசா தேவதாச போய் வருகிருயா ! போய் வருகிருயா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/41&oldid=726808" இலிருந்து மீள்விக்கப்பட்டது