பக்கம்:Harischandra.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1} ஹரிச்சந்திரன் 51. می to a தேவ. (Б• 3ra தேவ. பிராணகாதா, அதை வையாதீர்; அது என்னே விற்று, உமது சத்யத்தைக் காப்பாற்றும்படியான பேருதவி செய்து பெரும் புண்ணியம் சம்பாதிக்கப் போகிறது ! (அக் காத்திற்கு முத்தமிடுகிருள்.) இனி துக்கப்படாதீர்கள், நேரமாகிறது. ஆமாம் அண்ணு, நீங்கள் துக்கப்படாதீர்கள். என்னேயும் அம்மாளோடு விற்று, கடனேக் கொடுத்துவிட்டு இந்த பிராம் மணரை அனுப்பி விடுங்கள் ஊருக்கு. (அவனைக் கட்டி யணைத்து பாலா! பாலா! மழலைச் சொல் மாருத உன் அமுத வாயினின்றும் இம் மாற்றத்தைக் கேட்கும்படி நேரிட்டதே! எத்தனையோ தெய்வங்களுக்குப் பிரார்த்தன செய்து, எத்தனையோ நோன்பியற்றி, எத்தனையோ தவஞ் செய்து அருமையாகப்பெற்ற உன்னே-அடிமையாக நான் விற்பதோ ? என்னே அடிமையாக வில்லும், என்று உன் அருமை வாயில்ை கூறக் கேட்டும், ஆவி போகாது இருக்கி றேனே பாவி நான் !-பாமனே பாமனே! இதையும் உமது கண்ணுல் பார்த்துக்கொண்டிருக்கிறீரே! தயை புரிந்து பேரிடி யொன்றை இப்பாவியின் தலைமீது விழச்செய்து பஸ்மீகாப் படுத்தமாட்டீரா ! தேம்பி அழுகிருன்.) ஒஹோ! அப்படி தப்பித்துக் கொள்ளலாமென்று பார்க்கி ருயோ முனிவர் கடனேக் கொடாமல் ஒ! இப்பொழுது தெரிகிறது உன தெண்ணம் இந்த யுக்தி செய்யப் போகிற தாக முன்பே சொல்லியிருக்கக் கூடாதா? இவ்வளவு கஷ்ட மெல்லாம் பட்டிருக்கமாட்டேனே! பிராம்மளுேத்தமரே, என்னே இந்த ஸ்திதியில் கண்டும் மன மொப்பி ஏளனம் செய்கிறீரே -இனி உங்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை, இதோ என் மனைவி மக்களை விற்று உம்மி டம் செலுத்தவேண்டிய பொருளைச் செலுத்துகிறேன். சரி, உன் இஷ்டம், சீக்கிரம் ஆகட்டும், நேரமாகிறது. ஆம் பிராணநாதா, நேரமாகிறது இனி தாமதியாதீர். ஆமாம் அண்ணு. தேவதேவனே! உமது திருவுள்ளம் நிறைவேறட்டும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/57&oldid=726825" இலிருந்து மீள்விக்கப்பட்டது