பக்கம்:Harischandra.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 ஹரிச்சந்திான் 53 茂T。 என்னுங்காணும் அது கும்பல் ? என்னு சமாசாரம் ?-ஒய் ! நீ யார்? ஹ. தத்யசே, நான் ஹரிச்சந்திரன், ஒருகால் அயோத்தியை யாண்ட அரசன யிருந்தவன்; நான் விஸ்வாமித்திர முனிவருக் குக் கொடுக்க இசைக்த கடனைத் தீர்க்கும் பொருட்டு, என் மனைவி மக்களாகிய இவர்களை அடிமைகளாக விலை கூறுகி றேன். தாங்கள் தயவுசெய்து 蕊。 அப்படியா சமாசாாம் ?--உம்-என் ஆத்துக்காரிக்கு ஒரு வேலைக்காரி வேண்டி யிருக்கு-இந்தப் பப, என் கைகால் பிடிக்க ஒதவுவாம்போ லிருக்கு-அதிருக்கட்டும். அடிமையா நான் வாங்கின.கே, என்ன வேலை செய்வா இவா ? ஹ. ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டஸ் திரீ, அடிமையாக விற்கப்பட் டால், தர்மப்படி அவள் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று சாஸ்திரங்கள்,விதித்திருக்கின்றனவோ, அவைகளை யெல்லாம் செய்வாள்-இவனு மப்படியே. கா. அது கெடக்கட்டும், நீர் என்னு வெலெ கேக்கறிர் ? ഇ. உயர்ந்த யானேயொன்றின்மீதேறி, வல்லான் ஒருவன் வலுக் கொண் டெய்யும் மாணிக்கம் செல்லும் உயரம் அளவு பொன். 莎信。 ஐஐயோ! எங்காணும், வெளாடா என்ன ?--இவ்வளவு பொன் என்னிடத்திலெ எங்கே இருக்கு? ஸ்ராத்த தட்சிணே யைக் கொண்டு ஜீவிக்கும்படியான நேக்கு, இத்தனெ பொன் எங்கிருந்து கெடைக்கும் ?-அப்பப்பா ! இது மக்குக் கிட் டாது-என் ஐயா, ஏதாவது கொஞ்சம் கொறச்சி பாருமே ? ஹ. அந்தனரே, அறைக் காசும் குறைக்க முடியாது. என்ன மன் னிக்கவேண்டும். ஐயா காசிவாசிகளே! இந்த விலையைக் கொடுத்து என் மனேவியையும் மைந்தனையும் அடிமையாக்கிக் கொள்வார் எவரேனும் உளரோ இவ்விடித்தில் ? ஜனங்கள். இவ்வளவு வெலெ யாரையா கொடுப்பா? ஹ. இல்லாவிடின் வேறு இடம் போய்ப்பார்க்கிறேன் கா. சத்தெ பொறுங்காணும் ஹரிச்சந்திரரே - என்ன ரொம்ப அவசாமா யிருக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/59&oldid=726827" இலிருந்து மீள்விக்கப்பட்டது