பக்கம்:Harischandra.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 69 6).j. அப்படி உங்க ரெண்டுபேரையும் ஆத்தெ விட்டு அடிச்சி தொாத்திவிட்டா, உங்களுக்கு நல்லதுதான் ; அந்த கஷ்ட மெல்லாம் இல்லாமெஇருப்பைக. கோ. தேவதாசா, நீ ஒன்றும் பயப்படாதே, உன்னெ பயமுறுத் துறத்துக்கு அப்படி சொல்லி யிருக்கும் அந்தக் கெழம். உங்க அம்மாவெ அடிக்காது அது, நாங்கசொல்ரோம் வாரொம்ப கோமா போச்சு. தேவ. ஒரு கிமிஷம் பொறுங்கள்--இதோ வந்துவிட்டேன். அதோ பாருங்கள், அந்தக் குன்றின்பேரில் நல்ல தர்ப்பை இருக்கிறது பச்சென்று, ஒடிப்போய் ஒரு கொடியில் அதை அறுத்துக் கொண்டு வருகிறேன். அதைப் பார்ப்பாராயின் ஐயர் சந்தோ ஷப்பட்டு என் தாயாரை அடிக்காம லிருப்பார். (இடுகிருன்) கோ. அடடடெ கில்லு கில்லு!-கேட்காதெ இடாம் பாரு ! கால் தடுக்கி விழுந்தா னிண்ணு என்ன செய்யரது ? ரா. புத்தி வரும் அப்போ. - கோ. உனக்கு இவ்வளவு வயசாகியும் இவ்வளவு புத்தி வந்துதெ! தேவ. என்ன பச்சென் றிருக்கிறது ! காலையில் இவ்வழி வந்த பொழுது இதை நான் எப்படிப் பாராது விட்டேன் ? - (தர்ப்பையை அறக்கிமுன்.) ஐயோ! பாம்பு! பாம்பு : பாம்பு என்னேக் கடித்துவிட் டது கடித்துவிட்டது -அதோ ஒடுகிறது . ஒடுகிறது! மற்றவர். ஆ! ஆ! எங்கே எங்கே? (அவனருகில் ஓடுகின்றனர்.) தேவ ஐயோ அம்மா ! அம்மா விஷம் ஏறுகிறதே ! ஏறுகிறதே ! அண்ணு அண்ணு அம்மா-அப்பா ! (மரிக்கிருன்) மற்றவர். ஐஐயோ! தேவதாசன் செத்துபூட்டான் காம என்ன செய் யாது.டா ! 剪打。 நாமெல்லாம் ஒடிப்பூடலாம் வாங்கடா இங்கே இருக்கக் கூடாது, GŁj. என்னுட இது பாவம் இந்த பயலெ இங்கெ இப்படியா விட்டுப் போாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/75&oldid=726845" இலிருந்து மீள்விக்கப்பட்டது