பக்கம்:Harischandra.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் 7] இாண்டாம் காட்சி, இடம்-அதே வனம். இரவு. சந்திரமதி தேடிக்கொண்டு வருகிருள். Ꭶ. கண்ணே கண்ணே தேவதாசா ! எங்கே யிருக்கிருயடா என் கண்மணி ! உன் உடல் எங்கே கிடக்கிறதோ ? இப்பே ருலகில் என்னிலும் பெரும் பாவியாரேனு முண்டோ ? என் அருமை மைக்தனேப் பறிகொடுத்தது மன்றி, அவனதுடலே யும் காணுது கதறவேண்டி வந்ததே!-ஈசனே ஜகதீசா ! இந்த அடர்ந்த காட்டில், இக் கருக்கிருட்டில், என் கண்மணி யின் உடலை நான் எங்கென்று தேடிக் கண்டு பிடிக்கப்போகி றேன் ! ஐயோ ! என் மனம் போல் இவ்வாகாயமும் இருண்டி ருக்கிறதே ! ஒரு நட்சத்திரத்தையும் காணுேமே! அந்தோ ! அவைகளெல்லாம் பாலன யிழந்த இப்பாவியைப் பார்ப்பதும் பாபமென்றெண்ணி மறைந்திருக்கின்றனவோ கருணையில் லாத அப்பிராம்மணன் சூர்யாஸ்தமனத்திற்குமுன் எனக்கு உத்தரவு கொடுத்திருப்பாாாயின் என் கண்மணியின் உடலி ருக்கு மிடத்தைக் கண்டுபிடித்திருப்பேனே. அந்தோ என் கண்மணியின் உடலைக் கட்டி பழுதாவது என் துயரம் கொஞ் சம் தீரக் கொடுத்து வைக்காத பாவியானேனே -பிராம்ம ணப் பிள்ளைகள் குறித்த இடம் இதுதான் என்று நினைக்கி றேன். அதில் சந்தேக மில்லை.-ஆயினும் இங்கே ஒன்றும் என் கண்ணுக்குப் புலப்படவில்லையே-எல்லாம் காடாந்த காரமாயிருக்கிறதே -இது என்ன காலில் தட்டுப்படுகிறது ? கட்டையா ?-அன்று அன்று கண்ணே கண்ணே தேவ தாசா மைந்தா மைந்தா ! (உடலின்மீது வீழ்ந்து மூர்ச்சையாகி, பிறகு சற்று பொறுத்து தெளிந்து) மைக்தா என் அருமை மகனே என் கண்மணி! தேவதாசா தேவதாசா மடிந்தனையோ மடிந்தனையோ ?-- பன் மடிமீது அவனுடல வளர்த்திக்கொண்டு) கண்மணி இச்சிறு வயதில் நீ இறக்கவேண்டுமென்று உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/77&oldid=726847" இலிருந்து மீள்விக்கப்பட்டது