பக்கம்:Harischandra.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் 73 மகிழ்வேனே -இல்லை என்ன நீ கடிக்கமாட்டாய் என்று தெரியுமெனக்கு; புண்ணியம் செய்தவர்களே இப்பாழுல கத்தை விட்டு விரைவில் நீங்கி, சுவர்க்கம் புகுவார்கள். என்னேப் போன்ற கொடும்பாபிகள் பல வருடங்கள் இப் பாரினில் உழன்று நாகவேதனையை அனுபவித்துப் பரிதபிக்க வேண்டுமன்ருே? அந்தோ இவ்விாேழ் புவனங்களிலும் என்னப்போன்ற கொடும்பாபி எவரேனு முண்டோ ? இல்லாவிடின் மகிதயன் புத்திரியாய் மண்ணினி லுதித்து, மன்னர் மன்னனை அயோத்தி அரசன் அருந்துணைவி யாய் வாழ்க்கைப்பட்டும், நாடு நகரத்தையெல்லாம் இழந்து, நாயகனிடமிருந்து பிரிக்கப்பட்டு, அடிமையாய் விற்கப் பட்டு, அருமை மைத்தனையும் பறி கொடுத்து, அநாதை யாய் அருங் கானகத்தில் அழுது கிற்கக் காலம் வாய்த்ததே ! அந்தோ பரமேசா ! எந்த ஜன்மத்தில் என்ன பாபமிழைத் தேனே இக்கதிக்கு வர ?-அந்தோ அந்தோ! அந்த பர மேஸ்வான் கருணையினுல் எனது நாதன் கற்கதி யடைந்து, என் அடிமைத்தனத்தை விடுவிக்க ஒருகால் வந்து, என் அருமை மைந்தன் எங்கே, என்று கேட்பாராயின் அவருக்கு நான் என்ன பதில் உரைப்பேனடா கண்மணி கண்மணி ! நீ இறந்து போனுய் என்று என் வாயால் எப்படி அவருக்குச் சொல்லுவேன் அப்படி நான் சொல்வேனுயின்-அருமை மைந்தன் இறந்தும் ஆவி தரித்திருக்கிருள் இப்பாவி, இவளை இனி நாம் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது, என்று தன் ஆவி துறப்பாரே அதற்கு நான் என் செய்வேன்? என் செய் வேன்? பிராம்மணர் உன்னைக் காட்டிற் கனுப்பினுர் என்று கூறவேணுயின், யுேம் துணையாக என் செல்லவில்லையென்ற கேட்பாாே ஐயோ! அக்கடின சித்தமுடைய பிராமணன் அறியாப் பாலணுகிய உன்னே இவ்வருங் கானகத்திற் கனுப்பி ஞரே! அவரை கொக்தென்ன பலன் ? இவ்வாறு நீ இறக்க வேண்டுமென்று பிரமன் உன் தலையில் எழுதியிருந்தால் அதை மாற்ற ஆசாலாகும் ? எல்லாம் வல்ல கடவுளே! இப்படியும் உமது திருவுளம் இருந்ததே! ஏழையென் செய்வேன்? ஏதும் உமதிச்சைப்படியே ஆகுக!-ஆயினும், கருணக் கடலெனப் பெயர் பூண்ட உமக்கு என் அருமைப் பாலகன்மீது மாக்கிரம் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/79&oldid=726849" இலிருந்து மீள்விக்கப்பட்டது