பக்கம்:Harischandra.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. தே. ஹரிச்சந்திான் முச் தேவேந்திரனே, அங்கன மொன்றுமில்லை ஒரு முக்கியமான காரியமாக பூலோகம் போகவேண்டி யிருந்தது. அவ்விடம் கொஞ்சம் காலதாமத மாச்சுது, என்ன முக்கியமான காரியம் என்று வினவலாமோ ? சொல்லத் தடையில்லை. பூவுலகில், அயோத்தியில், அறநெறி வழுவாது அரசு செலுத்தும் ஹரிச்சந்திரனெனும் எனது அன்புமிகும் சிஷ்யனுக்கு, சீக்கிரத்தில் பூர்வ கர்ம வசத்தால், பெருக் கெடுதி நேரிடப்போகிறதென ஞான திருஷ்டியாற் கண்டவனுய், அதைச் சமனம் செய்யும்பொருட்டும், எது நேர்ந்தபோதிலும் அவன் மேற் பூண்ட சத்ய விரதம் அழியா மலிருக்கும் பொருட்டும், ஒர் யாகம் இயற்றவேண்டியதா யிருந்தது. அதனல் தான் சிலகாலம் அவ்விடம் தங்க வேண்டி வந்தது. மஹரிஷி, தாங்கள் கூறியதில் சத்யவிரதம் பூண்டவன் என்று கூறினீர்கள், அது இன்னதென்று அடியேனுக்குத் தெரிய வில்லை, சற்று விளங்கச் சொல்லவேண்டும். கேளாய் தேவேந்திரனே, சத்திய விரதம் என்பது மிகவும் மகத்தான விரதம். அதை அணுவளவேனும் பங்கமின்றி அனுஷ்டிப்பது சத்யலோக வாசிகளுக்கும் மிகவும் கடின மென்ருல், கேவலம் மண்ணுலகில் வசிப்பவர்கள் அதை மேற் கொள்ளல் எவ்வளவு கடினம் என்று நீயே யோசிக்கலாம். சத்ய விரதம் என்ருல், பொய்யாமையைக் கடைப்பிடித்தல், கூறியவாய் மொழியினின்றம் அணுவளவும் குன்ருமை, என்ன இடுக்கண் நேரிட்ட போதிலும், எப்படிப்பட்ட ஹீன ஸ்திதியை அடைவதாயினும், சொல்லிய சொல் தவறுமை, இக் கஷ்டமான விரதத்தைக் கடைப்பிடித் தொழுகுகிருன் எனது சிஷ்யனை ஹரிச்சந்திரன். அந்த விரதத்தினின்றம் தவறமாட்டானே அந்த ஹரிச் சந்திரன்? யார் கேட்டது அக் கேள்வி ? (கிரும்பிப் பார்க்சி) இ! தாங்களா ? வாரீர் விஸ்வாமித்திரரே !.--நான் உம்மைத் பார்க்கவில்லை.-அவ் விரதத்தினின்றும் எனது கிஷ்யன் தவற மாட்டான் என எண்ணுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/8&oldid=726850" இலிருந்து மீள்விக்கப்பட்டது