பக்கம்:Humorous Essays.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

31

ஏனென்றால் அதன் பலன் அவர்களுக்குத்தான் முக்கியமாகத் தெரியும். ஐம்பத்தைந்து வயது உண்மையில் பூர்த்தியானவுடன், துரைத்தனத்தாரால் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி கட்டாயப் படுத்தாதபடி இன்னும் இரண்டொரு வருஷம் உத்தியோகத்திலிருக்க லாமல்லவா?

பிள்ளையாண்டானுக்கு பன்னிரண்டாவது வயதாகும் போது இன்னெரு கஷ்டம். ரெயில் பிரயாணம் செய்யும் பொழுதும், நாடக கொட்டகைகளுக்குப் போகும் போதும், 'பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை சார்ஜ்’ என்று எங்கெங்கே விளம்பரம் போட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பதினான்கு பதினைந்து வரையில் அவர்களுக்கு இரண்டு மூன்று வயது குறைந்து போகிறது-பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களாகி விடுகிறார்கள்! சில வருஷங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவருடைய மகனுக்கு நான் எழுதிய ஹரிச்சந்திர நாடகத்தைப் பரிசாகக் கொடுத்துப் படிக்கச் செய்தேன். பிறகு ஒரு நாள் அவனைச் சந்தித்து ஏதோ விஷயமாக அவன் வயது என்னவென்று கேட்டேன். அதற்கு அவன் (அரிச்சந்திரன் கதையைப் படித்தபடியால் உண்மையை உரைக்க விரும்பினவனாய்) “ரெயிலில் போகும் போது எனக்கு வயது பதினொன்று, பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு; வீட்டில் பதின்மூன்று” என்று பதில் உரைத்தான்.

இந்தக் கஷ்டம் ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரம் என்று எண்ண வேண்டாம்-இது தற்காலம் நமது பெண் பிள்ளைகளையும் பீடித்திருக்கிறது. சுமார் பன்னிரண்டு பதின்மூன்று வயதில்-முக்கியமாக அவர்கள் திவிஜாதிப் பெண்களாயிருந்தால்-அவர்களுக்கு பத்து பன்னிரண்டு வயதிலெல்லாம்-கலியாணம் செய்ய வேண்டுமென்று ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது சாரதா சட்டம் வராததற்கு முன்பாக அப்படியே அவர்களுக்குப் பெரும்பாலும் கலியாணமாகி வந்தது-தக்க வரன்கள் கிடைக்கும் போதெல்லாம். சில சமயங்களில் தக்க வரன் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? பதினான்கு பதினைந்து வயதான போதிலும் பத்து பதினொன்று வயது சிறுமிகளாகவே வளராமலிருக்க வேண்டி வருகிறது. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/37&oldid=1352477" இலிருந்து மீள்விக்கப்பட்டது