பக்கம்:Humorous Essays.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

43

விரும்பு=நீ சாப்பிடு. இதில் மற்றுமொரு சூட்சுமார்த்தமுண்டு; அதாவது விதைகளிருந்தால்தானே பயிர் செய்ய முடியும், ஆகவே வித்தை விரும்பு என்பது ஆத்திச்சூடியில் மிகவும் முக்கியமான ஒரு வரியாம். ஆயினும் இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு, வித்தை விரும்பு என்று சொல்லி விட்டு, “வாதுமைக் கோரேல்” (வாதுமுற் கூறேல்) என்று ஏன் எழுதினார்களோ தெரியவில்லை. எல்லா வித்தையும் விரும்பும்படி உபதேசித்து விட்டு, வாதுமைக் கொட்டையை மாத்திரம் ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும்? இது ஆராயத்தக்க விஷயம்.

கடைசியாக “ஓரம் செல்லேல்” (ஓரம் சொல்லேல்) என்பது ஒரு வரியாம். இதுவும் நம்முடைய சிறுவர்களுக்கு சிறந்த புத்திமதி தருவதாம். தெருக்களில் ஓரமாகச் சென்றால், சாக்கடைகள் முதலிய அசங்கியங்கள் இருக்கும், ஆகவே நடுவில் போவதுதான் சரி, என்று இதனால் நாம் அறிய வேண்டியிருக்கிறது.


தமிழ் மாது படும் கஷ்டம்

நமது தாய் பாஷையாகிய தமிழ் மொழியானது தமிழ் மக்கள் வாயிலேயே மிகவும் துன்புறுகிறது என்பது யாவரும் வியசினிக்கத் தக்க விஷயமே. சுத்தமாகத் தமிழ் பேசுபவர்கள்.சிலரே என்று கூற வேண்டும். இங்கிலீஷ் பாஷை நமது நாட்டில் நுழைந்த பிறகு, தமிழ் கலப்பு பாஷையாகி விட்டது. “அழுதாவது சொல்லு சொல்லியாவது அழு, இாண்டையும் ஒன்றாகச் செய்யாதே” என்று ஒருவர். கூறியபடி, நாம் தமிழாவது பேச வேண்டும், இங்கிலீஷாவது பேச வேண்டும்; இரண்டையும் கலந்து பேசினால், என் செய்வது? இதைப் பற்றி எனது நண்பர் ஒருவர் “”என்னா சார் (sir) டமில் பியூரா (Tamil pure) பேசத் தெரியாதில்லே, லாட்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/49&oldid=1360487" இலிருந்து மீள்விக்கப்பட்டது