பக்கம்:Lord Buddha.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കേു. புத்த அவதாரம் 17 அதன் இறகில் அது ஊடுருவிச் சென்றபொழுது அப் பட்சிக்கு என்ன வருத்த முண்டாயிருக்கும்? ஐயோ! பட்சிகளையும் மிருகங்களையும் என் வேட்டையாடி அம்பு களிஞல் அவைகளுக்குக் கஷ்ட முண்டாக்கி அவைக ளுயிரை நாம் போக்கவேண்டும் ? கிராயுதபாணியா யிருக் கும்பொழுது நம்மை யொருவன் வில்லம்பு கொண்டு வேட்டையாடுவானுயின் நமக்சுெப்படி யிருக்கும் ?-- மித்திரர் மறுபடி வருகிருச். அப்பா, சித் கார்த்தா, என்ன ஒருவாரு யிருக்கிருய் ! ஆசார்யாே, தாங்கள் வந்ததைப்பார்க்கவில்லை, (வணங்கி) மன்னிக்கவேண்டும், என்ன யோசித்துக்கொண் டிருக்கிருய் ! ஸ்வாமின், இவ்வுலகில் துக்கம் என்பது இப்படிப்பட்ட தென்பதை இப்பொழுது தான் அறிகிறேன். இவ்வுல கில் இத் துக்க மென்பதே இல்லாம லிருக்கும்படிச் செய்ய மார்க்கமொன்று மில்லையா என யோசிக்கிறேன். அப்பா, அது தேவர்களாலும் முடியாத காரியம், அசாத் தியமான விஷயத்தைக் கருதி அல்லற் படாதே. ஸ்வாமின், முன்பே தங்களைக் கேட்கவேண்டுமென் றிருக்கேன் ஒரு விஷயம், இன்று. காலை நான் துயில் நீத்து எழுந்திருக்கும் தருவாயில், ஒரு கனவு கண்டது லிருந்தது-கனவென்றே சொல்லவேண்டுமென்று கினைக்கிறேன்-யாரோ ஒரு பெரியவர் என்னிடம் வந்து -அப்பா, இன்னும் என்ன அந்தகாத்திலிருக்கிரும்? -c பிறந்த வேலையை யோசித்துப் பார்-கண்விழி ' என்று என்னைத் தட்டி எழுப்பியது போலிருந்தது. கண் விழிக்க, ஒருவரையும் காண து கலங்கினேன். ஸ்வாமி, . . . vo. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/20&oldid=727214" இலிருந்து மீள்விக்கப்பட்டது