பக்கம்:Lord Buddha.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சித்தி, 'புத்த அவதாரம் |அங்கம்.3 என்றே என் மனம் தேடுகிறது-அம்மார்க்கத்தைக் கண்டு பிடிப்பேஞயின், உனக்கும் சுகம், எனக்கும் சுகம், உலகமனைத்திற்கும் சுகமாகு மல்லவா ? ஆம், பிராண நாதா, ஆகவே அதைக் கண்டுபிடிக்க நான் யத்தனிப்பதில் நீ எனக்கு உதவி புரியவேண்டாமா ? ஆம் பிராணகாதா, உண்மையே.-என்னுற் செய்யக் கூடியதைச் சொல்லும் செய்கிறேன். ஆயின் கண்மணி, இவ்வரண்மனையை விட்டு வெளியே போய் ஆங்காங்குள்ள காட்சிகளைக் கண்டுவர எனக்கு விடையளிப்பாய்-முதலில், அப்படியே பிரானாதா, தங்கள் சொல்லுக்குக் குறுக் குண்டா ? அன்றியும் நீர் கூறிய மொழிகளைக்கேட்டு என்னேயுமறியாதபடி எனக்கொரு மகிழ்ச்சி யுண்டா கிறது; ஆகவே இது முடிவில் கம்முடைய நன்மைக் காகவே ஆகும் என நம்புகிறேன். - கண்மணி, மிகவும் உசிதமான வார்த்தை உாைத்தாய். கண்மணி, சித்திாைக்கு உன் முத்து மாலைகளில் ஒன் றைப் பரிசாகக் கொடு. - - (யசோதரை அங்கனமே செய் கிருள்.) சித்திரை, சந்தகனே அழைத்து காளைப் பகல் எனது மதத்தைச் சித்தமாய் வைத்திருக்கும்படிச் சொல், நான், வெளியேபோய் முதலில் நமது பட்டணத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று விரும்புவதாக என் தந்தை யிடம் சொல்லி யனுப்பு. ஆக்கினேப்படி இளவாசே, வணங்கிப் போகிருள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/51&oldid=727248" இலிருந்து மீள்விக்கப்பட்டது