பக்கம்:Mixture.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் 31 ஜதை பூட்சை அந்த மெஷினின் பின்புற வாய்வழியாக அதற்குள போட்டு, மெஷினே திருப்பிவிடுகிருர்கள். இாண்டு கிமிஷத்திற் கெல்லாம் மெஷினின் முன் வாய்வழியாக அந்தக் கன்றுக்குட்டி உயிரோடு வந்து விடுகிறது! سساس سحه سنسیس பதினோாவது கதை ஆயிரம் சிங்கங்களை அரை நொடியில் சுட்ட கதை ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒரு முறை நான் ஆயிரக்கணக்கான சிங்கங்களை ஒரே குண்டில் கொன்றதை உங்களுக்கு நான் இது வரையிற் சொல்லவில்லையே சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு முறை ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒரு தேசமாகிய எகிப்தை ஆண்ட்ெேடங்காம்ன்(Tukenkhamen)என்னும் அரசன் கன்தேசத் தில்சிங்கங்கள் அதிகப்பட்டு மிகவும் தொந்திாவு செய்கின்றன என்று அவைகளை அதம் செய்வதற்காக என்னேத் தன் நாட்டிற்கு அழைத் திருந்தார். சிங்கவேட்டையில் மிகவும் பிரிய முடைய கான் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டு அத்தேசம் போய்ச் சேர்ந்தேன். சிங்கவேட்டைக்காக ஒரு நல்ல நாள் குறித்துப் புறப்பட்டு சிங்கங் கள் கிாம்பிய காட்டிற் கருகில், சாயங்காலம் என் கூடாரத்தை அடித்து, நாளை வேட்டைக்குப் போகலாமென்று என் ஆட்களுக்குச் சொல்லிவிட்டு, தனியாய் ஒருபுற மிருந்த என் கூடாாத்திற்குள் போய்ப் படுத்துக் கொண்டேன். அன்றிரவு அரசர் அளித்த விருந்து சாப்பாட்டினல் சரியாக கித்திரை வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று தூரத்தில் சிங்ககர்ஜனே ஒன்று என் காதிற்பட்டது. உடனே எழுந்து பார்க்க, துரத்தில் அநேக சிங்கங்கள் என் கூடாரத்தை நோக்கிவருவதைக் கண்டேன். உடனே என் துப்பாக்கியை எடுப்பதற்காக கூடாரத்தின் பின் பக்கம் நான் திரும்ப, அதற்குப் பின்புறமாக வேறு ஒரு பெரிய சிங்கக் கூட் டம் வருவதைக் கண்டேன்! இந்த சங்கடத்திற்கென்ன செய்வது ? இந்தப் பக்கம்வரும் சிங்கங்களை சுட்டுக் கொண்டிருந்தால்; முன் பக் கம்வரும் சிங்கங்கள் என்னேக் கொன்று விடுமே, என்று நான் யோசித் தக் கொண்டிருக்கும் பொழுது, மற்ற இரண்டு பக்கங்களும் கூட இாண்டு பெரும் சிங்கக் கூட்டங்கள் வருவதைக் கண்டேன்! இவை களை யெல்லாம் கொல்வதற்கு வேறு வழியில்லை என்று ஒரு யுக்தி செய்தேன் ; உடனே என்னிடமிருந்த துப்பாக்கி மருந்தை பட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/38&oldid=727331" இலிருந்து மீள்விக்கப்பட்டது