பக்கம்:Mixture.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தற்கால நாடக சபைகளை அபிவிர்த்தி செய்வதேப்படி? திற் பிரவேசித்தவுடன் ஏதாவது பாடவேண்டும், அல்லது பிர வேசிக்கும்பொழுதே ஏதாவது பாடிக்கொண்டு வரவேண்டும், என்று ஒரு மிகவும் தவருன அபிப்பிராயம் இருக்கின்றது பிா வேசமாகவேண்டிய சந்தர்ப்பம் அல்லது கட்டம் எப்படிப் பட்டது, இதில் பர்டிக்கொண்டுவருவது பொருத்தமானதா அல்லவா என்று கொஞ்சமேனும் யோசிப்பகேயில்லை. ஒரு அரசன் காட்டில் வேட்டை பாடப் போகிருன்; அதற்குப் பிரவேசிக்கும் பொழுது ஒரு பாட்டு ஒரு திருடன் ஒரு விட்டில் திருடப்போகிமுன்-அதற்கொரு பாட்டு துரியோதனன் சகுனியால் பாண்டவரைத் தன் கைவசப் படுத்தச் சூழ்ச்சி செய்யப் போகிருன், அதற்கொரு பாட்டு இப் படிப்பட்ட ஆபாசமான உதாரணங்களைப் பெருக்கிக்கொண்டு போனல்,இந்த வியாசம் முடியாது! இப்படிப் பாடுவதிலும் சந்தர்ப் பத்திற் கிசைந்த பாட்டாயிருக்கிறதா ? அதுவும் இல்லை. வள்ளி மணம் எனும் நாடகத்தை தமிழில் கடத்துவதில் முதன் முதல் சுப்ரமணியர் காதருக்குக் காட்சி கொடுக்கும் காட்சியில், சுப்பிர மணியர், 1QఇL ஜெய கோகுல பாலா’ என்னும் பாட்டைப்பாடிக் கொண்டு சங்கத்தில் பிரவேசிப்பார் : ஞானசவுந்தரி நாடகத்தில் பிலேக்கிரன், முதலில் தோன்றும்பொழுது, எவானி கிர்ணயின் சேகிா وو எனும் பாட்டை பாடுவார். ஒரு முறை எனது நாடக மான விலாவதி-சுலோச,ை ஒரு கம்பெனியாரால் ساتلانفسه பொழுது, அயன் ராஜபார்ட்டாகிய நீ தத்தன் வேடம் பூண்ட ஆக்டர், ஒரு இந்துஸ்தானி தில்லாகு பாடிக்கொண்டு பிரவேச மானுர் @باستيان واليان உதாரணங்களைப் பெருக்க எனக்கு அவகாச முமில்லை. மனமுமில்லை. சில கம்பெனிகளில் முக்கியமான ஆக்டர் கள் சங்கத்தை விட்டுப் போகும்பொழுது ஏதாவது பாட்டைப் பாடிக்கொண்டு போகிற வழக்கமுண்டு! சதாாம் நாடகத்தில் சதா ாம் திருடல்ை அபகரிக்கப்பட்டு போனபின், துயின்றெழுந்த அவள் காதலனை கதாநாயகன் அவளேக் காணுமற் பாடி அழுது விட்டுப் போகும்பொழுது, ஒரு கில்லானுபாடி மறைந்ததைப் பார்த்திருக்கிறேன். குலேபகாவலி நாடகத்தில் தந்தையிடம் வரு கிற அவனது நான்கு குமார்களும், ஆரம்பத்தில் ஒவ்வொரு பாட் டைப் பாடிக்கொண்டு வருவது மன்றி, காட்சியை விட்டுப்போகும் பொழுதும் ஒவ்வொரு பாட்டைப்பாடிக்கொண்டு போனதை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/53&oldid=727348" இலிருந்து மீள்விக்கப்பட்டது