பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. நாடகமேடை நினைவுகள் பகர்ந்திடச்செய்ய நான் விரும்புவேன்..............இடிபோல் முழங்கி, சண்டமாருதமெனவரும் உமது ரெளத்திரம் முதலிய ஆவேசங்களிலும், ஒரு வித அடக்கத்தை வகித்தவராய், அத்து மீருது ஒழுங்கின உடையவரா யிருத்தல் வேண்டும். அர்த்த மில்லா அபின ங் களையும் ஆரவாரக் கூச்சல்களையுமே அதிகமாய் விரும்பும் அற்பஜனங்களின் காதுகள் பிளந்து போகும்படிக் கத்து வகைக்கா லுங்கால், என்மனமெல்லாம் புண்படுகின்றது. இராட்சதர்களைத் தோற்கடிக்கச்செய்யும் அப்படிப்பட்ட ஒரு வனத் துடப்பத்தால் அடித்துத் துரத்த விரும்புவேன் நான். .....உம்மை வேண்டுகிறேன், இதை விட்டொழியும்...... அத்து மீறிப்போவது நாடகமாடுவதின் தாத்பர்யத் துக்கு முற்றிலும் விருத்தமாகும்”, என்பனவேயாம். இவ்வார்த்தைகளை சற்று நான் விவரமாய் வரைந்ததற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. இம் மனுேஹான் பாத்திரத்தை ஆடும் ஆக்டர்கள் பெரும்பாலும் ஷேகஸ்பியர் மகா நாடகக்கவி, எக்குற்றங்களையெல்லாம் களைய வேண்டு மென்று போதித் திருக்கின்ருரோ, அக்குற்றங்களை யெல்லாம் உடையவர்களாயிருப்பதே. அக்குற்றங்களை யெல் லாம் நீக்கி ஆடாமையே, அவர்கள் இப்பாத்திரத்தில் பெயர் பெருமைக்குக் காரணம் என்று உறுதியாய் நம்பி, சரியான வழியில் இதை ஆடுவார்களென்று விரும்பியே இதை எழுதலா னேன். முக்கியமான இக்காட்சியில் மனேஹானுக நடிக்கும் பாத்திாம் கவனிக்க வேண்டிய வி ஷ ய ம் என்னவென்முல், இதைப் பார்க்கும் ஜனங்கள், மனேஹானுடைய முழுதே.க பலத்தையும் நாம் கண்டு விட்டோம் என்னும் யேர்சனையை அடையச் செய்யலாகாது என்பதேயாம். மனே ஹானுடைய முழு வல்லமையையும், நாம் கண்டோமில்லை; ஒரு கூற்றினைத் தான் நாம் பார்க்கிருேம், இதற்கே இப்படி இருக்கிறதே, இன் லும் அவனது முழு சக்தியையும் நாம் காண்போமாயின் எப்படி இருக்கும் என்னும் ஆச்சரியத்தை யுண்டுபண்ண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. இப்புத்திமதியை இப்பாக் திரத்தை ஆடவிரும்பும் என் இளைய கண்பர்களெல்லாம் சற்றுக் கவனிப்பார்களாக, நான் வாஸ்தவத்தில் மிகுந்த பலஹீன முடையவன், என் யெளவனத்திலும், அவ்வயதுள்ள சிறுவர் களுடைய தேக பலத்திற்குக் குறைவான சக்தி யுடையவனுயி ருந்தேன். ஆயினும் இக்காட்சியில் நான் நடிக்கும்பொழுது, எதோ மிகுந்த பலமுடையவனுகத் தோற்றப்பட்டேன் என்று என் பால்யநண்பர் பூரீனிவாச ஐயங்கார் பன்முறை கூறியுள்ளார். இல்லாத ஒன்றை இருப்பது போல் நடித்துக் காட்டுவதே நாட கத்திற்கு முக்கியமான ஒரு பெருமையும் அழகும் என்று அறி ஞர் கூறுகின்றனர்.