பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அத்யாயம் அநேக சாஸ்திரங்களில், இன்ன காரணத்தினுல் இன்ன காரியம் உண்டாகிறதெனச் சற்றேறக்குறைய நிச்சயமாய்க் கூறலாகும். மனிதனுடைய குளுதிசயங்களைப்பற்றி ஆராயுங் கால், இன்ன காரணத்தால்தான் இன்னது உண்டாயிற்று,என்று கூறுவது மிகவும் கடினமென்பதே என் கொள்கை. என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோஸ்யன் 'நீ தமிழ் நாடக ஆசிரியனுகப் போகிருய்' என்று கூறியிருப்பா ஞயின், அதை நானும் கம்பியிருக்கமா ட்டேன், என்னே தன்ரு யறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பலவருடங்களுக்கு முன் ஒரு கூத்துக்கொட்டகை இருந்தபோதிலும், சென்ன பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்ட போதிலும், அது வரையில் ஒரு தமிழ்நாடகத்தை யாவது நான் ஐந்து கிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின்மீது அதிக வெறுப்புடையவனுயுமிருந்தேன். அதற்குக் காரணம், நான் இப்பொழுது யோசித்துப் பார்க்குமிடத்து, கான் பால்யத் தில் பீபில்ஸ் பார்க்கில் வருடந்தோறும் கடந்து வந்த வேடிக்கை யிலும், இன்னும் இதர இடங்களிலும், அகஸ்மாத்தாய் நான் கண்ட கூத்தாடிகளின் நடை புடை பாவனேகள் என் மனதிற்கு உண்டாக்கிய ஜிகுப்சையே யென்று கினைக்கிறேன். அன்றியும் என்னுடைய தகப்பனுர் என்னத் தன்னுடன் துங் கம்பாக்கம் பழய காலேஜ் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஆங்கிலேய நாடகங்கள் ஐரோப்பியரால் நடிக்கப்பட்ட போது அழைத்துக் கொண்டு போயிருந்தார். அவர்கள் பூண்ட வேஷங்களையும், நான் மேற்கூறிய தமிழ்க் கூத்தாடிகளின் வேஷங்களையும் ஒத்திட்டுப் பார்க்கும் பொழுது, எனக்கு அக்காலத்திய தமிழ் நாடகங்களின் மீதும் அதன. ஆடுவோர் மீதும் விருப்பமில்லாம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/6&oldid=727471" இலிருந்து மீள்விக்கப்பட்டது