பக்கம்:Pari kathai-with commentary.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 (4. கபிலர் நட்புக்கோட் மீத்தது காட்டிற்று. விறல்-பெருவிறல் என்பது இவற்குப் புலவரிட்ட பெயர். பகைவரோகிகழற் கம்பலை கண்ட, செருவெஞ் சேஎய் பெரு விறகுடே’ (புறம். 120) என வருதலான் அறிக. பொய்வீழ்ந்த

  • -*. - - - t * - - - r * நெஞ்சு-பொய் தன்கண் இல்லாது கழிக்க பனம்; "விழ்நாள் படாமை'

(குறள்) என்ப. புலவர்கோன்-பாரிதக்க நாட்டார் தலைமையினுஞ் சிறந்த புலவர் தலைமையை உடையன். மெய்வீழ்ந்த பூனூல்-மார்பிற் முழவிட்ட தானே அணியாகிய முந்நூல். வகிப்படுப்ப-பாரி மார்பிற் சவகி உண்டாக; அழுந்தத்தழுவுதல் குறித்தது. 'ஆகம் வகிக்கொள முயக்கி" என்பது நற்றிணை. (22.9) "என் ஞகம் புரிவுண்ட நூல்வடு வாப்புல்லி (வெண்பா-பாடாண்) என்ப இவ்வாறு உடல் தழுவுவதே கூறுவார், அவ்விருவர் உயிரும் தழுவியதைத் தாங்காளுர் என்க. 'துறைவன் மெய்தோய் முயக்கம்' என்பது கற்றிணை (199). உயிர் கண்ணிற் காணுத பொருளாகலின் உடலளவே கண்டு கூறினர். எ-று, உயிரொன்முதல் செயிரறக்கூறி, யிருவரு மவ்வழித் கழிஇ யினர்' (விருத்தி வகுத்தது 84-85) எனப் பெருங்கதையினும் வந்தது காண்க. கபிலர் பாரியை நோக்கிக்கூறிய புறப்பாட்டில் (236) கலந்த கேண்மைக் கொல்வாய்' என்றது. உயிர் கலந்த கேண்ம்ை ஆதலல்லது உடல்கலத்த கேண்மையெனக் கூறற்சாகாமை காண்க. 12. உடல்புல்லு வான்போன் றுயிர்புல்லிக் கல்விக் கடல்புல்லு வான்சிர்க் கபிலன்-றிடல்புல்லுங் கல்லுங் கரையக் கழறின னின்னுரைகள் - வெல்லுக் திறனுய்ந்து வேட்கு. ( இ-ள்.)-கண்டார்க்கு உடல் தழுவுவான் போன்று மெய்ம்மை யிற் பாரி யுயிரைத் தழுவி என்று என்ச. மேற்பாட்டினும் ஈண்டும் கபி லன் புல்லுதல் கூறியதன்றிப் பாரி கபிலனப் புல்லிஞன் என்று கூருமை பெரியவர் புல்லுங்காற் முன்புல்லும் பேதையும்' (திரிகடு கம், 74) எனச் சான்ருேர் நெறி பாதுகாத்தபடி யெனக்கொள்க. கல் விக் கடலைப் புல்லி முகக்கும் மேகத்தின் சீர்மையையுடைய கபிலன் என்றது கல்வி யென்னும் பெரிய பரந்த கடலிற் சாரமாகியவற்றைத் தழுவி எடுத்து உலகிற்குப் பொழிதலின் மேகத்தின் சீர்மையன் எ-து. திடல்புல்லுங் சல்லுங்கரை-திடலிற்புல்லிக்கிடக்கும் கற்களும் உருக. அகத்தியர் இராவணனைக் சந்தருவத்தாற் பணித்தார் என்ற லாத் கல் இன்னுேசைக்கு உருகுதல் அறியலாம்; இன்பொருளொடு புணர்த்த இன்மொழிக்கும் உருகுபென்க. உருகாதனவும் உருகுதல் கருதிற் றெனினுமமையும்; 'கல்லுஞ்சொல் லாதோ கவி' என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/181&oldid=727813" இலிருந்து மீள்விக்கப்பட்டது