பக்கம்:Pari kathai-with commentary.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 95 தன்கண் நாணின்மை குறித்தது: அங்கிலையை வின்னுயிர் விலைத்தற் பொருட்டு என்கட் காண்பாயாகுக எ-று. 'நன்று பெரிதாகும்' (தொல், உரி) என்ப. என் உயிர் பறம்பினளவிற் பயன்படுமென்றும் உன் உயிர் உலகிற்குப் பயன்படும் என்றும் குறிப்பது காண்க. (30) 142. பழியா னுறுகேன் பழிப்பிலா நீயே யொழியா துலகி ைெளிரும்-வழிதா னதுவாயி னேன்ருற் கறைந்தான் கபிலன் மதுவாயின் சொல்லான் மதித்து. (இ.ள்.)-நீயே உலகிைெழியாதி பழிப்பிலா தொளிரும் வழி தான் யான் பழியுறுவது காரணமாக உண்டாயின், அப்பழியை மிக வடைவேன் என்றுரைத்த பாரிக்கு ஆராய்ந்துகொண்டு மதுவின் நன்மை வாய்ந்த இனிய மொழிகளால் அறைந்தான் எ-று. பழியைத் தாமேற்றுக்கொண்டு பிறர் பழிதவிர்த்த பேராசரும் உலகில் உண்டு பொற்கை நறுந்தார்ப் புனதேர்ப் பாண்டியன்' ஒழுக்கத்தை இனக்க. "பிறர்பழியுக் தம்பழியு நானுவார்' (குறள்) என்புழிப் பிறர் பழியை முற்கூறிய நயத்தை உய்த்துணர்ந்து கொள்க. நாவளவி லினிக்காது உயர்ந்த மருந்தாகிய தொன்றைத் தேனில் மறைத்து அளிப்பாரைப் போலச் செவியளவில் இனிக்காது உயர்ந்த பொருளை இன்சொல்லில் வைத்தளித்தனன் என்பது குறிப்பு. (51) 14. இறந்தா ருயிர்காத் தியைதன் னுயிர்போற் புரந்தா ருயிரனைத்தும் போற்றல்-பரந்த பழியா யோழியிற் பழிப்பில் புகழ்தான் மொழியா யிதுவென்று முன். (இ-ள்.)-இாந்தார் உயிர் காத்தல் ஈண்டுக்கபிலன் தன்னுயிர் காத்தலே கருதிற்று. இயைதன்னுயிர் போற்புரந்து ஆருயிரனைத்தும் போற்றல், பாரி அரசெய்திப் பாரளித்தலைக் குறித்தது. இவ் விரண்டுமே கபிலளுல் வேண்டப்பட்டனவாம். இவை பரந்த பழியா யொழியுமேற் பழிப்பில்லாத புகழ்தான் இதுவென்று முற்படயானறிய மொழியாய் எ-மு. இயை தன்னுயிர்-தன்னுடம்போகி இயைந்த உயிர். புரந்தி போற்றல்-குடிகளைப் பிறர் கலியாமம் காத்துத் தானும் கலியாமற் பேணுதல், கபிலன் உயிர்காத்தல் என்ருன்; பாரி இணங்கா னேல் அப்போதே உயிர்விட வினைத்தலான். பழப்பில் புகழ் என்றது பகைவரும் பழிகாண்டற்கரிய புகழ். புகழையே பழியென மாறுபடக் கருதினை யென்பது குறிப்பு. . (52)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/192&oldid=727825" இலிருந்து மீள்விக்கப்பட்டது