இடைக் காட்சி.2] சகதேவன் சூழ்ச்சி 17
தூ. அது ஒரு மாதிரியான வியாதியடா, என்ன சின்ருலும் பசி அடங்குகிறதில்லையாம்.
தா. அபிமன்யு வந்த உடன் நான் இந்த மூடியை எடுத்துக் காட்டுகிறேன். அவன் உள்ளே பார்க்கும் சமயத்தில் நீ அவன் வாயைக் கட்டிவிடு, நான் கையைக் கட்டி விடுகி றேன். ஜாக்கிரதை 1 அதோ வருகிருன் போலிருக்கிறது.
கடோற்கஜன் அபிமன்யு உருவத்துடன் வருகிமு ன். க. எங்கேயடா அப்பா, என் மாமனர் அனுப்பி வைத்த பலஹாாம் ? இதோ இக் கூடையில் வைத்திருக்கிறது.
(மூடியைத் திறந்து காட்டுகிருன், கடோற்கஜன் உள்ளே பார்ப்பதுபோல் குனிய, அவன் வாயை தாம்ராட்சன் கட்டி விடுகிமுன், தாம்ராட்சன் அவன் கையைக் கட்டிவிட, இருவருமாக அவ னைத் தாக்கி அக்கட்டையில் போட்டு மூடி விடுகிரு.ர்கள்.) எதாவது சப்தம் கிப்தம் போட்டாயா, அப்படியே ஆற் றில் போட்டுவிடுவோம்!
(இருவருமாகத் தாக்கிக்கொண்டு போகிமுர்கள்)
காட்சி முடிகிறது.