பக்கம்:Sahadeva's Stratagem.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) சகதேவன் சூழ்ச்சி 25 பூநீசி: அறும் பாாாமல் சத்தியம் உரைத்தனே! அந்தசத்தியமே உன் னேக்காக்குமாக ! ஹே கிருஷ்ண மூர்த்தி ! ஹே சபை யோரே! நாளை யுத்தத்தில் நான் வென்ருலும் சரி, தோற் முலும் சரி இந்த ராஜ்யம் எனக்கு வந்தாலும் சரி, போன லும் சரி காங்கள் செய்த சபதம் கிறைவேறிலுைம் சரி, நிறைவேரு விட்டாலும் சரி! இவையனைத்தும் எனக்குப் பெரிதல்ல, சாஸ்திரப்படி சத்திய நெறிதவருத சகதேவ னைத் தம்பியாகப் பெற்றத் தருமன் என்கிற அந்த ஒரு பெ யர் போதும் எனக்கு -காயாம் பூவண்ணனே எம் கண் ணனே ! கிருஷ்ணு!-உலகுள்ளளவும் அழியாப் புகழ் அவனுக்கு என்றும் நிலைத் திருக்கும்படி உமது திருவா யால் ஆசிர்வாதம் செய்யும்! (கிருஷ்ணனருகில் சகதேவனை அழைத்துச் செல்கிரு.ர்.) சபாஷ் சபாஷ் சரிதான் !-கேட்டீர்களா சபையோர் களே! இவர் பெரியவராயிற்றே, இதற்கு ஏதாவது பரிஹாரம் செய்வாரென்று இதை இவருக்குத் தெரிவிக் கால், ஏனடா இப்படிச் செய்தாய் புத்தியில்லாதவனே, என்று அவனைத் தண்டிப்பதை விட்டு, அவனைக்கட்டி யணேத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டுப் புகழ்கிருர் இந்த அகியாயத்தை நான் ஆருடன் சொல்லி ஆறுவது? கன் தல்ை தரைமீதுருள லக்னம் வைத்துக்கொடுத்த தம்பியை மெத்தவும் புகழ்கிருர் தர்மாாஜன்! எல்லாம் உள்ளுக் குள் ஏதோ உளவாயிருக்கிறது. கடைசியில் நான் ஒரு வன் தான் பழிக்காளவேன் போலும், விதை விளைய வேணும் என்று நான் பட்டபாடெல்லாம் விழலுக்கி ாைத்த ரோச்சு விருதாவாக எனக்கு பேச்சாச்சு | விவகாரம் கெட்டுப் போச்சு :- கர்மாாஜனே அதிகாரி வீட்டில் கிருடித்தலையாரி வீட்டில் ஒளித்து வைத்தது போல், இதை உம்மிடம் சொல்லிக்கொண்டேனே 1 அக் காைக்காரருக்கில்லாத காரியம் அயலாருக்கு என்ன வந்தது வீர்யம்! இனி நீர் உமது இஷ்டப்படி நடத்திக் கொள்ளும், என்னே ஒன்றும் கேளாதீர். கேட்டாயடா அப்பா, பீமா, நடந்த சமாசாரத்தை யெல்லாம் ? 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/31&oldid=729820" இலிருந்து மீள்விக்கப்பட்டது