பக்கம்:Saiva Nanneri.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சேரமான் பெருமாளின் காலம் சேரமான் பெருமாள், சுந்தரர் இவர்களது காலத்தை அறிஞர்கள் பலர் ஆராய்ந்தனர். அவ்வாறு ஆராய்க்கவ ருள் தஞ்சைச் சீனிவாசம் பிள்ளை, இராமகாதையர், ாேராயண் அய்யர், டாக்டர் மீனாட்சி ஆகிய பேரறிஞர்கள் சேரமான்பெருமாளின் காலம் கி. பி. 9-ஆம் நூற்ருண் டாகுமென்றனர். பல்லவர் வரலாறும், சேரமான் நூல் களில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகளும் இவர்கள் எட்டாம் நூற்ருண்டு என்பதற்குத் துணைபுரிகின்றன என்று காலம் சென்ற சதாசிவப் பண்டாரத்தார், கோவிந்தசாமிப் பிள்ளை, மு. இராகவையங்கார் ஆகி யோர் கூறியுள்ளனர். சேரமான் மூன்று நூல்களேச் செய்துள்ளார். அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானவுலா என்பவை யாகும். இவற்றுள் பொன்வண்ணத்தந்தாதி என்பது தில்லையில் செய்யப்பட்டது. திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரிற் செய்யப்பட்டது; ஆதியுலா கைலாயத்தில் அருளப்பட்டது. - தன்னுடைய கருவி கரணங்களைத் திருத்தொண்டில் ஈடுபடுத்தல், உடல் வாழ்வின் உயர்வனமை, தொண்டு செய்யும் முறை, தொண்டினை யேற்கும் இறைவன் து அருமை நிலை, அம்மையப்ப்ளுய் ஆண்டவன் எழுந்தருளும் திறம், அவன் அட்ட மூர்த்தியாய் அமைதல், அகப் பொருள் துறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல். லாடல் ஆகியன பொன்வண்ணத்தந்தாதியில் பொதுளி யுள்ளன. ஒவ்வொரு தமிழ்க் கவிஞரும் தாம் கவிபாடும். - * : * காரணத்தை நூலின் முகப்பிற் கூறுவர்; அல்லது இறுதி யிற் கூறுவர். பின்னேய முை றக்குச் சம்பந்தரைக் ്,D லாம். ஆல்ை சேரமான் பெருமாளோ கவிபாடும் கார ணத்தை நூலின் முகப்பிலும் உை ரக்கவில்லை; முடிவிலும் விள்ம்ப்வில்லை. நூல் தொடங்கி இருபது பாக்கள் பாடிய பின்னரே கூறுகின்ருர். அது வருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/108&oldid=729852" இலிருந்து மீள்விக்கப்பட்டது