பக்கம்:Saiva Nanneri.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11() கீத் என்போர் கி. பி. எட்டாம் நூற்ருண்டுக்கும் ஒன்ப காம் நாற்ருண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த வர் சங்கரர் என்று கூறியுள்ளனர். அதனைக் காம்போச காட்டுக் கல்வெட்டு உறுதி செய்வதாகப் பேராசிரியர் லே கண்ட சாத்திரியார் கூறுவர். எனவே சங்கரர் கி. பி. ஒன்பதாம் நாற்ருண்டின் முற்பகுதியினர் என்னலாம். அதனுல் மாணிக்க வாசகர் காலம் கி. பி. ஒன்பதாம். நாற் ருண்டின் இடைப்பகுதியாகவோ அன்றிப் பிற்பகுதி யாகவோ இருக்கலாம். அடிகள் பாண்டியன் வரகுணனைக் குறித்துள்ளார். ' வரகுணனம் தென்னவனேத்து சிற்றம்பலத்தான். சிற்றம்பலம் புகழும் மயலோங்கு - . இருங்களியானே வரகுணன்." இடைக்காலப் பாண்டியர்களுள் வரகுணன் எனப் பெயர் பெற்றவர் இருவர் உளர். அவர்களுள் இரண்டாம் வர குணனே மாணிக்க வாசகரால் குறிக்கப் பெற்றவன் என் பது சீனிவாசப் பிள்ளே கருத்தாகும். முதல் வரகுணன் 'காலம் கி. பி. 793-835 ஆகும். இரண்டாம் வரகுணன் இவனுக்கு மகன் வயிற்றுப் பேரன், இவனது காலம் ía , ᏞᏛ , 8Ꮾ2-880 . -- திருவாசகமும் திருக்கோவையாரும் பட்டினத்தாரின் பொருளுரைகளும் திருவிடை மருதுார்த் தலபுராணமும் பிறவும் வரகுண பாண்டியன் என்பவன் திருவிடைமரு அார், தில்லை ஆகிய இடங்களில் ண்ேட காலம் தங்கிச் சிவப்பணி புரிந்தனன் என்று கூறுகின்றன. திருவிடை மரு.அாரும் தில்லேயும் சோழநாட்டுப் பதிகள். அப்பதி அளிலே பணி செய்யவும் நீண்ட காலம் தங்கவும் வேண்டு. காஜல், வரகுண பாண்டியன் ஆட்சிக்கு அவை உட்பட்ட வையாகவும், பாண்டியன் மிகுந்த வல்லவனாகவும் இருங் ருத்தல் வேண்டும். முதல் வரகுண்ன் கல்வெட்டுக்களே சோழாாட்டிலுள்ள திருவியலூர், திருநெய்த்தானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/115&oldid=729860" இலிருந்து மீள்விக்கப்பட்டது