பக்கம்:Saiva Nanneri.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 தாமே ஒரு பிட்டு வாணிச்சிக்குக் கூலியாளாக வந்து மண் சுமந்து, வேந்தன் கொடுத்த பிரம்படியும் பெற்று அரசர்க்கு உண்மையை உணர்த்தி மறைந்தருளினர். பின் அடிகள் திருப்பெருந்துறை, திருவுத்தரகோச மங்கை முதலிய தலங் களுக்குச் சென்று பல திருப்பதிகங்கள் பாடி கடைசியா, கத் தில்லை நகர் அடைந்து புத்தர்களை வாதில்வென்று, ஊமைப் பெண்ணேப் பேசுவித்து, இறைவன் அந்தணர் வடிவில் வந்து வேண்ட திருவாசகமும் திருக்கோவையாரும் பாடினர். அவரது பாடல்களே எல்லாம் இறைவன் தாமே எழுதிக் கைச் சாத்திட்டுத் திருவம்பலப்படியில் வைத்து மறைந்தார். பின்னர் அடிகளார் திருவருளில் இரண்டறக் கலந்தார். அடிகளாரது வரலாற்றினேத் திருவாதவூரடி கள் புராணம் என்னும் நூல் தெளிவாக எடுத்துரைக்கின் றது. இந்நூலின் காலம் பதினெட்டாம் நூற்ருண்டு ஆகும். அ.டிகள் அருளிய நூல்கள் அடிகள் பாடிய திருவாசகம் என்பது ஒதுவார் உள் ளத்தைக் குளிர்விப்பது; கற்கக் கற்கப் பேரின்பம் நல்கும் பெற்றியது; கருங்கல் மனத்தையும் கரைத்துக் கண்ணிர் விடச்செய்வது. இவரது பாடல்கள் அனைத்தும் உருகிப் பெருகி உளங்குளிர முகந்து கொண்டு பருகுதற்கு இனிய தாய், உணர்ச்சி என்னும் ஒளி ஊடுருவப் பெற்றதாய், உணர்ந்துஉணர்ந்து அன்பேகிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணிரை ஒழுகச்செய்வதாய்ப் படிக்குங்தொறும் படிக்குங் தொறும் இன்பம் பயப்பதாய்ப் பின் அவற்றை எண்ணுக் ஆதாறும் எண்ணுக்கொம் இரும் பூது பயப்பதாய் விளங்கு கின்றன. அது கருதியே "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு விசகத்திற்கும் உருகார்' என்ற பழமொழி வழங்கப் படுகின்றது. இத் தோத்திர நூலில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த டாக்டர் போப் இதனை ஆங்கில் த்தில் மொழி 顯* o பெயர்த்து இதன் பெருமையை உலக மக்கள் அனைவரும் சை-8 ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/118&oldid=729863" இலிருந்து மீள்விக்கப்பட்டது