பக்கம்:Saiva Nanneri.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சைவ சமயத்தைப் போன்று உலகில் வேறு எந்தச் சமயமும் கற்பனைத் திறனும், கவிதையழகும், உணர்ச்சிப் பெருக்கும் உடைய சிறந்த இலக்கியங்களைப் படைக்கவில்லை.

—டாக்டர் எல். டி. பார்னெட்.

"Sailvism is the nost ancient faith in the world.”

—Sir John Marshall.

சைவக்கொள்கை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும்.

—சர் சான் மார்சல்.

“Saiva Siddhanta may be ranked among the perfect and clcvcrest system of human thought.”

—Dr. Kamil zvilabil.

சைவ சித்தாந்தம் முழுமையுடையதாகும்; மனித சிந்தனைத் திறனுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

—டாக்டர் கமில் சோவிலபில்.

"Saivam is a humanitarian religion-universal and ever linting."

—R. G. Nallakutralam.

சைவம் என்றும் எங்கும் நிலவும் அன்புச் சமயமாகும்.

—ஆர். ஜி. நல்லகுற்றாலம்.

மேலே தரப்பட்டுள்ள பல அறிஞர் பெருமக்களது கருத்துரைகள் சைவத்தின் மேன்மையையும் தொன்மையையும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்று தெள்ளிதிற் புலப்படுத்தும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லே. சீரும் சிறப்பும் மிக்க சைவ சமயம் இந்நிலவுலகில் காணும் சமயங்க பலவற்றிலும் மிகவும் தொன்மை வாய்ந்தது; பரந்த நோக்குடையது; தனித்த ஒரு மனிதரால் தோற்று விக்கப்பெறாதது. ’இதுவாகும் அதுவாகாது’ என்னும் பிணக்கில்லாது விளங்கும் இச்சமயம், பிற சமயக் கோட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/13&oldid=1404679" இலிருந்து மீள்விக்கப்பட்டது