பக்கம்:Saiva Nanneri.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 யனைப்பற்றியும் அடிகளார் தமது பாடல்களில் கூறியுள்ள காரணத்தினுலும், கம்பியாண்டார் நம்பிகள் அடிகளாரது பாடல்களைத்தொகுத்துள்ள காரணத்தாலும் அடிகள்ார் தேவார் திருவாசக ஆசிரியர்க்கும் கம்பியாண்டார் நம்பிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதல் சாலப் பொருந்தும், நாடெங். கனும் அற்புதங்கள் நிகழ்த்திவந்த அடிகளார் இறுதியாகத் திருவொற்றியூரில் ஒருநாள் கடற்கரை யில் சிறுவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிவலிங்க உருவில் திருவுருக் கரந்து, உருவசித்தி என்று வழங்கப்படும் முத்தி கிலேயை அடைந்தார். திரு வெற்றியூரில் அடிகளாரது கோயில் இன்றும் சிறப்புற விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆண்டுதோறும் ஆயி ர்க்கணக்கான மக்கள் வந்து செல்லுகின்றனர். டிட்டினத்துப் பிள்ளையாரின் திருப்ப்ர்ட்ல்கள், கோயில் நான்மணிமாலை, திருவிடைமரு.தார் மும்மணிக் கோவை, திருக்கழுமலமும்மணிக் கோவை, திருவொற்றி யூர் ஒருபாஒருபஃது, திருவேகம்பமுடையார் திருவங்காதி ஆகிய்வை அடிகளாரது நூல்களாகும். இவ்வைந்து நூல்க ளும் பதினேர்ாந்திருமுறைக்கண் தொகுக்கப்பெற்றுள் ள்ன. இவையேயன்றிக் கோயில் திருவகவல், கச்சித்திரு வகவல், திருவேகம்பமாலை, திருவேகம்ப விருத்தம், பல தனிப் பாடல்கள், முதல்வன் முறையீடு, அருட் புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நெஞ்சொடு மகிழ்தல், உடற் கூற்று வண்ணம் ஆகிய நூல்களும் பாடல்களும்கொண்ட பட்டினத்துப் பிள்ளையார் பிரபந்தத்; திரட்டு ' என்ற தொரு தொகுப்பு நூலும் கிடைக்கப் பெற்றுளது. சித்தர் ஞானக்கோவை என்ற தொகை நூலிலும் இவ் ரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனல் இவ்விரண்டு தொகுப்பு நூல்களிலும் காணப்பெறும் பாடல்கள். பாடி ரரும் படித்து மகிழும்வண்ணம் பிற்காலப் பாவகைதிகளத் தழுவியதாய், பேச்சு மொழிச்சொற்களைக் கொண்டன வாய் எளிமையாக உள்ளன. இதல்ை பிற்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/130&oldid=729877" இலிருந்து மீள்விக்கப்பட்டது