பக்கம்:Saiva Nanneri.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வாழ்ந்த வேருெரு பட்டினத்தாரால் இப்பாடல்கள் பாடப் பட்டிருக்குமோ என ஒரு சிலர் எண்ணுகின்றனர். அடிகளார் ஆ1 ல்களே ஆராயின் பல புராண வர லாறுகளேக் கால லாம். இவரது பாடல்கள் கவிச் சுவை யும் சிவச் சுவையும் கொண்டு விளங்குகின்றன. சிவனது முழுமுதற் பெருமையினேயும், அடியார்களது சிறப்பினை யும் இவர் தமது பாடல்களில் பல இடங்களில் பலபடப் போற்றிக் கூறியுள்ளார். அடிகளாரது கோயில் நான் மணிமாலே என்னும் நூல் சிதம்பரத்தின்மீது பாடப் பட்டதாகும் நாற்பது பாடல்களையுடையது. தில்லையின் சிறப்பை இந்நூல் நன்கு எடுத்துக்கூறுகின்றது. திரு விடை மருதுார் மும்மணிக்கோவையில் திருவிடைமருதா ரின் இயற்கை வளத்தைச் சுவைபடப் பாடியுள்ளார். ......... உற்பல வாவியில் பாசடைப் பரப்பிற் பால்கிற அன்னம் பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள் போர்த்தொழில் புரியும் பொருகா விரியும் மருதமுஞ் சூழ்ந்த ' என்பது அடிகளாரின் மருதம் பற்றிய வருணனையாகும். къ அடிகளார் காலத்தில் சிவாகமங்கள் வழியொழுகும் சித்தாந்த சைவம் தமிழகத்திற் பரவியது. இச் சமயம் வேதங்களேயும் சிவாகமங்களையும் தனக்கு அடிப்படை நால்களாகக்கூறும். 'வேதமே ஒப்பென வோது கோபுரமும் சிவாகமம் என ஒளிர்தவா மணி மேடையும்." சிவாகமங்களேச் சித்தாந்தம் என்று ஆகமங்களே குறிப் பிடுகின்றன. இதனை அடிகளும் குறிப்பிடுகிரு.ர். 1 கைவல நெல்லியங் கணியது போலச் சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை வரன் முறை பகர்ந்த திருமலர் வாய்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/131&oldid=729878" இலிருந்து மீள்விக்கப்பட்டது