பக்கம்:Saiva Nanneri.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பதிகங்கள் காணப்படுகின்றன. இந்த இருபத்தைந்து o பதிகங்களிலே உள்ள முதற் பாட்டுக்களின் முதற் சொற்கள் கொண்ட அகவல் ஒன்றும் அகத்தியர் தேவாரத் தி, ட்டிலே காணப்படுகின்றது. மேலும் இப்பதிகங்களில்ே பேசப்படும் எட்டுப் பொருள்களைப் பற்றிக் கூறும் வெண்பா ஒன்றும் உள்ளது. அவ்வெண்பா வருமாறு: 'திருவுருவும் வெண்ணிறு எழுத்தஞ்சும் கோயில் அரனுருவம் என்தலைமேல் ஆக்கும்-திருவடியும் சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க்கு இட்டார் அகத்தியனர் எட்டு.” குருவருள் அல்லது திருவுருவம் மூவரும் முதன்முதல் சிவனருள் பெற்றகாலே பாடிய முதற் பதிகங்களே குருவருள் என்ற தலைப்பிலே காணப் படுவன. சம்பந்தர் பதிகம் "தோடுடைய செவியன்'.எனத் தொடங்குகின்றது. அப்பர் பதிகம் கூற்ருயினவாறு” என ஆரம்பிக்கிறது. பித்தா பிறை குடி' எனச் சுந்தரர் பதிகம் தொடங்குகின்றது. இம் மூவர்தம் திருப் பதிகச் சிறப்புக்களே ஆராயவேண்டுமானல் அவர்கள் இப் பதிகங்களேப் பாடியபொழுது இருந்த அவர்தம் உள்ள நிலே, குழ்கிலே ஆகியவற்றை ஆராய்தல்வேண்டும். பால் மனம் மாருப் பச்சிளங் குழவியாக இருந்தபோது சம்பந்தர் பாடிய பதிகத்துக்கும், குலேநோயால் குடலும் உடலும் உயிரும் ஒடுக்கி மடக்கப் பெற்றுப் புறச்சமய வெறுப் புற்றபோது அப்பர் பாடிய பாடலுக்கும், மலமாசு நிறைந்த இளமை முறுக்கு இறங்கப்பெற்றகால் சுந்தரர் பாடிய பாடலுக்கும் இடையே உள்ள வேற்றுமைகள் மிகப் பல வாகும். பசித்துன்ப க்ேகமும், பால் தந்த இன்ப ஆக்கமும் பெற்ற சம்பந்தர் பதிகத்திலே குழந்தையுள்ளம் குழைந்து காணப்படுகிறது. துன்பத்தால் துயர் மிகப் பெற்றுத் அடிக்கும் அப்பர் பாடிய பாடலிலே அவர் தம் உள்ளக் அமுறல் ஒளிவிடுகிறது. கொடு நரகில் விழ இருந்த தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/135&oldid=729882" இலிருந்து மீள்விக்கப்பட்டது