பக்கம்:Saiva Nanneri.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 னைத் தடுத்தாட்கொண்டதால் மனங்கனிந்த சுந்தரர் பாட லிலே இன்பவுணர்வு இளகி ஒடுகின்றது. அழகை அள் ளிப் பருகக் கட்புலன் செழுமையாக இருத்தல் வேண்டும். அழகினிடத்து எளிதிலே உளம் பறிகொடுப்பது குழங் தையே. அத்தகைய குழந்தையாம் சம்பந்தரோ ஞானப் பாலுண்டு சிவஞானம் பெற்ற ஞானத்தின் திருவுரு. அவ்வாருய குழந்தை சம்பந்தர் இறைவன்றன் திருக் கோலத்திலே, அவன்றன் கதிர்மேனி பொழியும் கண் கொள்ளாக் காட்சியிலே உளம் பறிகொடுத்தார்; இறை வன் மேனியழகை இரு விழிகளாலும் அள்ளிப் பருகினர். அவர்தம் உள்ளத்திலே அழகு எழுப்பிய முருகியல் இன்ப வுணர்வு பெருக்கெடுத்து ஒடலாயிற்று. உணர்வலைகள் அவர்தம் உள்ளத்திலே கொந்தளித்தன. அந்தக் கொங் தளிப்பிலே தன்னை மறந்தார். கவிஞன் கவிதை இயற்ற உதவும் அடிப்படையான அழகுணர்வு அவரை ஆட் கொண்டது. அவ்வளவில் இறைவன்றன் எழில் மேனி யைப் பள்டிவிட்டார். தோடுடையசெவியன் விடையேறியோர் துரவெண் - மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த

  • .... " ... "... " " ' அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானி வனன்றே.' "காத்தாள்பவர் காவலை இகழ்ந்து' சமண் சமயம் புகுந்த அப்பர் சூலே நோயால் துன்புறுத்தப்பட்டார். புகுந்த சமயத்தால் அவர் பெற்ற துன்பத்தைப் போக்க முடியவில்லை. எனவே சைவத்தை மேற்கொண்டார். சிவன் முன்னிலையில் பணிந்து கின்ருர். ஆனல் எளிதிலே சூலைநோய் அவரை விட்டு நீங்கிவிடவில்லை. ஒரு பக்கம் சமணத்தைத் துறந்தமை, மற்ருெரு பக்கம் சூலேகோயின் துன்பம், வேருெரு பக்கம் தான் கருதிவந்த செயல் கைகூடாமை ஆகிய இம் மூன்றிலுைம் தாக்குண்ட அப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/136&oldid=729883" இலிருந்து மீள்விக்கப்பட்டது