பக்கம்:Saiva Nanneri.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む 'இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகச் சிவலிங் கத்தைத் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ் வணக்கம் உலகின் பல பகுதிகளிலும் ஒருகாலை பரவி யிருந்தது என்பதை சிறுவுவதற்குச் சான்றுகள் கிடைத் துள்ளன. சீன, சப்பான், இந்துக் கடல் தீவுகள், பசிபிக் கடல் தீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு முற்றி லும் மறைந்துவிடவில்லே. ஆப்பிரிக்க மக்களிடையிலும் அமெரிக்கரிடையிலும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அரிேயா, யூதேயம், சிரியா, சிற்ருசியா, பாபிலோன் ஆகிய கேய மக்களிடையும் இது காணப்பட்டது என்பதைக் கிறித்தவ மறை வாயிலாக அறிகின்ருேம். சில நாட்க பிறக்கு முன்னர்ப் பாபிலோனியா நாட்டகத்தே சில இலிங் கங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. எகிப்து நாட்டின் சில இடங்களில் இலிங்கம் வனங்கப்பட்டது. எகிப்து நாட் டுப் பிரமிடுகளின் சுவர்களிலே இலிங்கங்கள் வெட்டப் பட்டுள்ளன. கிரீசிலே விசா என்னும் இடத்தில் இலிங்கத் கொடர்பான வழிபாட்டு முறைகள் இன்றும் நடைபெறு கின்றன. அயர்லாந்திலே இலிங்கங்கள் கிறித்தவ ஆல யங்கள் பலவற்றுட் காணப்படுகின்றன. அவை சில, காசிக்' (Shila na-geg) என வழங்கப்படுகின்றன. புதை பொருளாய்வாளர் இங்கிலாந்திலும் காட்லாந்திலும் இலிங் கங்கள் பல தோண்டி எடுத்துள்ளனர். அவ்வாறு எடுக்கப் பட்ட இடங்கள் உரோமர்கள் கோட்டை கட்டிய இடங்' களாம். உரோமர் இலிங்க வணக்கத்தைப் பரப்பியிருக்க, லாம்; அல்லது வென்ற காட்டின் சமயத்தைத் தழுவி. இருக்கலாம். செர்மனியிலும் இவ் வணக்கம் செழித்திருந்த மைக்குரிய சான்றுகள் உள.' இத்தகைய இலிங்க வழிபாடு பன்னுாருண்டுகளாக இந்தியத் துணைக்கண் டத்தே பரவியிருந்தது என்பதற்குச் சிங்து வெளியிற் கிடைத்த இலிங்கம் பொறித்த பொருட் களே சான்ருகும். இலிங்க வழிபாடு குறித்து ஆராய்ந்தவ முள் குறிப்பிடத் தகுந்தவர்கள் டாக்டர் சிலேட்டர், துர்கை சராசடிகள் என்போராவர். இவ்விருவரும் இலிங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/15&oldid=729898" இலிருந்து மீள்விக்கப்பட்டது