பக்கம்:Saiva Nanneri.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14? கூற வேண்டும். விசயாலயனது மகன் ஆதித்தன் கி. பி. 871-இல் பட்டமேறினன். இவன் காலத்தில் பல்லவ காட்டை அபராசிதனும், பாண்டிய நாட்டை இரண்டாம் வரகுணனும் ஆண்டு வந்தனர். கி. பி. 880-இல் பல்லவ அரசன், கங்க வேந்தன் பிருதிவிபதி ஆகியவர்களின் துணைகொண்டு ஆதித்த சோழன் பாண்டிய மன்னனைத் திருப்புறம்பயத்தில் முறியடித்தனன். இவ்வெற்றியே சோழர் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இவ்வாறு விசயாலயனலும் அவன் மகன் ஆதித்தலுைம் புதுப்பிக் கப்பட்ட சோழர் பரம்பரை தமிழ் நாட்டிற்கு கிலேத்த புகழைத் தேடித் தந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் விளங்கிய சைவம் என் லும் ஆலமரம் பச்சை இலைகளும் பவழக் காய்களும் திக் கெலாம் ஒடிய கிளேகளும் தொங்கும் விழுதுகளும் கொண் டதாய் விளங்கிற்று. இதற்குக் காரணம் சோழர் பரம் பரையினர் அனைவரும் சைவ ராய் விளங்கியமையே ஆகும். எனினும் அவர்கள் பிற சமயங்களில் மாறுபாடு கொண்ட வரல்லர். ஆதித்தன் தன் விரிந்த நாட்டில் பல சிவன் கோயில்களேக் கட்டினன். இவனது மனைவி திரிபுவன மாதேவி கோயில்களுக்குப் பல தானங்கள் செய்தாள். இவனது மகன் பராந்தகன் பெரு வீரனுவான். இவன் கி. பி. 907-953 வரை அரசாண்டான். தமிழ் நாடு முழு வதும் தன் கீழ்க் கொணர்ந்தான். ஈழத்தை வென்ருன். இவன் சிறந்த சிவபக்தனுக விளங்கினன். திருவாவடு துறை, செந்துறை முதலிய இடங்களில் இவன்கோயில்கள் அமைத்தான். இதனைத் திருவிசைப்பா பெரிதும் பாராட் டுகின்றது. பொன்னல் பசுச் செய்து அதன் வாய்வழி நுழைந்து பின் வெளிவந்து அப்பொம் பசுவை அங்கண ருக்குத் தானம் செய்தலாகிய ஏ மகர்ப்பம், துலையில் தான் ஏறிகின்று, தன் எடைக்குச் சரியாகப் பொன்னே கிறுத்து அப்பொன்னே அந்தணருக்குத் தானம் செய்தலாகிய துலா பாரம் ஆகிய தானங்களே இவன் செய்தனன். இவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/152&oldid=729901" இலிருந்து மீள்விக்கப்பட்டது