பக்கம்:Saiva Nanneri.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 வெள்ளிப் பாத்திரங்களையும், அணிகலன்களேயும். கால் கடைகளையும், பிறவற்றையும் மிகுதியாக வழங்கினர். மேலும் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளில் சில கோயி லுக்குத் தரப்பட்டன. பொது மக்களிடம் பணம் வசூலிக் கப்பட்டது. திே மண்டபத்தில் விதிக்கப்பெற்ற தண்டத் தில் ஒரு பகுதி கோயிலுக்குத் தரப்பட்டது. பிள்ளேயில் லாதவர் சொத்துக்கள் கோயிலைச் சார்ந்தன. கோயில்களில் காரியங்கள் ஒழுங்காக நடைபெறுதற்பொருட்டு ஆட் சிக் குழு அமைக்கப்பட்டது. அலுவலர் பலர் பணியாற்றி னர். சில கோயில்களில் மாகேசுவரர் என்ற சைவத்துறவி கள் காரியங்களே மேற்பார்த்தனர். சில கோயில்கள் கோயிலேச் சார்ந்த மடத்தலைவர்கள் மேற்பார்வையில் இருந்தன. சில கோயில்களே ஊரவையார் கவனித்துக் கொண்டனர். பெரிய கோயிலில் தனி ஆட்சிக்குழு இருந் தது. அவர்கள் கோயில் கணப்பெருமக்கள் என்றும், பாத மூலத்தார் என்றும் வழங்கப்பட்டனர். சில கோயில் களில் சமயக் கல்லூரிகள் விளங்கின. மாணவர்க்கு உணவு, உடை, இடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட் டன. சுருங்கக் கூறின் சோழர் காலக் கோயில்கள் சமு தாயக் குடியிருப்புக்களாய் விளங்கின. எல்லாக் கலை களும் கோயிலில் இடம்பெற்றன. மேலும் கோயில் மதிற் சுவர்களெல்லாம் வரலாற்றைக்கூறும் ஏடுகளாய் மாறின. தானம் கொடுத்தவர்கள் கோயில் மதிற்கூவரில் தாங்கள் செய்த தானங்களைப் பற்றியும், அவற்றைச் செயலாற்ற வேண்டிய முறைகள் பற்றியும், செய்த ஆண்டுகள் பற்றி யும், அக்காலங்களில் ஆண்ட மன்னர்களேப் பற்றியும், அவர்தம் வெற்றிச் சிறப்புகளைப் பற்றியும் ஒன்றன்பின் ஒன்ருக அழகுபடத் தொகுத்துப் பாமாலேயாக மாற்றிப் பொறித்து வைத்தனர். அரசனேப் பற்றிக்கூறும் பகுதியை வரலாற்ருசிரியர் மெய்க்கீர்த்தி என்பர். பிற்காலச்சோழர் தம் பெருமையினையும், ஆற்றலேயும், ஆட்சிச் சிறப்பையும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிந்து கொள்ளுவ தற்குத் துணே புரியும் இம் "மெய்க் கீர்த்திகள்' இன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/160&oldid=729910" இலிருந்து மீள்விக்கப்பட்டது