பக்கம்:Saiva Nanneri.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 திருமாளிகைத்தேவர்.சேந்தனர்.கருவூர்த்தேவர்.பூந்துருத்தி கம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேளுட்டடிகள், திரு வாலியமுதனர், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்ற ஒன்பது அடியார்கள் பாடிய திருவிசைப்பாக்கள் ஒன்ப தாம் திருமுறைக்குள் அடங்கும். திருமூலரது திருமந்தி ரம் பத்தாம் திருமுறை. சிவபிரான் பாணபத்திரனுக்குப் பொன் தருமாறு சேரமான் பெருமாளுக்கு விடுத்த பாடல், கல்லாடதேவ நாயனர் கண்ணப்பர் பற்றிப் பாடிய ஒர் அகவல், இளம் பெருமானடிகள் பாடிய ஒரு பதிகம், கபில தேவநாயனர் பாடிய இரட்டை மணிமாலை, பரமதேவநாய ர்ை பாடிய சிவபெருமான் திருவந்தாதி, நக்கீரதேவ நாய ர்ை பாடிய கண்ணப்பதேவர் திருமறம், திருமுருகாற்றுப் படை முதலியன காரைக்காலம்மையார் பாடிய திருவாலங் காட்டு மூத்ததிருப்பதிகம், திருவிரட்டைமணிமாலை, அற் புதத்திருவங்காதி ஆகியவை, ஐயடிகள் காடவர் கோன் பாடிய சேத்திர வெண்பா, சேரமான் பெருமாள் பாடிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞானவுலா என்பன, அதிரா அடிகள் இயற். றிய வியைகர் மும்மணிக்கோவை, பட்டினத்தடிகள் இயற்றிய கோயின்ைமணிமாலை, திருக்கழுமலமும்மணிக் கோவை முதலியன, நம்பியாண்டார்.கம்பி சம்பந்தர், அப் பர் ஆகியோரைப்பற்றிப் பாடிய பாடல்களும் பிறவும் ஆகிய அனேத்தும் அடங்கப் பெற்றதே பதினேராம் திருமுறை. பன்னிரண்டாம் திருமுறையில் பெரிய புராணம் சேரும். இப்பன்னிரு திருமுறைகளும், அவை தோன்றிய காலங்களின் அடிப்படையில் வகுக்கப்படாது, அவற்றின் சிறப்புக்களின்.அடிப்படையிலே முறைப்படுத் தப் பட்டுள்ளன. சம்பந்தரின் திருமுறைகளிலே இயற் கையின் பல்வேறு இனிய காட்சிகளையும், அவர்தம் களங்கமற்ற பளிங்கு உள்ளத்தையும் காணலாம். அப்பர் திருமுறைகளிலே உலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களின் பெருக்கைக் காணலாம். சுந்தரர் பாடல்களிலே இன்பமும் துன்பமும் பின்னிப் பிணைந்து செல்லும். மேலும் இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/162&oldid=729912" இலிருந்து மீள்விக்கப்பட்டது