பக்கம்:Saiva Nanneri.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 பாடிய தமிழ்க் காவியம் பெரியபுராணம் ஆகும். மேலும் இது சிறந்ததொரு வரலாற்றுப் புதையலுமாகும். திருத் தொண்டர் புராணம் என வழங்கப்பெறும் இந்நூல் காவி யச்சுவையும் கவிநலமும் கனிந்து ஒழுகும் நூலாகும். தற் காலத்திற்கேற்ற கருத்துக்கள் பலவற்றைக் கொண்டு விள்ங்கும் இந்நூல் சாதி மத வேறுபாட்டைக் கடந்து பிறப்பால் உயர்வு தாழ்வு கருதாத நிலைமையை விளக்கும். ஒரு சீர்திருத்த நூலாகும். இந்நூலாசிரியராகிய சேக் கிழார் பெருமான் குன்றத்தூரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவராகும். அமைச்சுத் தொழில் ஆற்றிய இவர் அநபா யச் சோழன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்கன் சீவகசிந்தாமணியில் ஈடுபட்டிருந்த நிலையினே உணர்ந்து அதனை மாற்றுவதற்காக வேண்டிப் பெரியபுராணத்தைப் பாடினர் என்று கூறப்படுகின்றது. சுந்தரர் பாடிய தொகை நூலே முதல் நூலாகவும், கம்பியாண்டார் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வகை நூலாகவும், கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை விரிநூலாகப் பாடி அருளினர். - - "கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெரு ■ --- வாழ்வோ. பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் = - -* சுமந்து விற்குவளை பவளமலர் மதிபத் த விரைக் கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன் என் o == றதிசயித்தார். 'ஐந்து பேரறிவும் கண்களேகொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிங்தையே ஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/164&oldid=729914" இலிருந்து மீள்விக்கப்பட்டது