பக்கம்:Saiva Nanneri.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கோட்பாடுகளுடன் விளங்கியிருக்கும் என்பதில் ஐய மில்லே. சங்க காலத்தில் ஒரளவுக்கே சைவத்தில் கலந்த பிறருடைய கருத்துக்கள், கோட்பாடுகள் ஆகியவை மூவர் காலத்தும், அதற்குப் பிற்பட்டும் அதிக அளவிற்குக் கலக் கத் தலைப்பட்டன. அதுமட்டுமன்று; அவ்வாறு கலந்த பிறர் தம் கோட்பாடுகளேக் கண்டித்த சமண புத்த சமயத் தினரையும் கண்டிக்கும் அளவுக்குச் சைவப் பெரியார் கள் சென்றுள்ளனர், அதற்கு எடுத்துக் காட்டு சம்பக் தரே. வேதமும் வேள்வியும் சைவத்திற்குப் புறம் டானவை என்பதிலே கருத்து வேறுபாடு எள்ளளவும் இல்லை. ஆல்ை சம்பந்தரோ வேதவேள்வியை கிந்தனே செய்த சமனரைத் தாக்குகிரு.ர். இவ்வாறு சம்பந்தர் காலத்தே சைவத்திற் கலந்த வைதிகக் கருத் துக்கள் நாளடைவில் சைவத்துடன் இரண்டறக் கலந்து விட்டன. பின்னர் சமணம், புத்தம் போன்றவற் றின் கருத்துக்களும் சைவ சமயத்திற் கலந்தன. இன் றைய சைவ சமயத்திலே சமணக்கருத்துக்கள் உண்டு; வைதிகக் கருத்துக்கள் உண்டு. துணுகி ஆராயின் கிறித் தவம் போன்ற அண்மைக் காலத்தே வந்த சமயக் கருத்துக் களும் காணப்படும். புத்தமும் சமணமும் இந்து சம யத்தின் கிளேகளாகும். பிற்காலத்தில் கிறித்தவ, இசுலா மிய சமயங்கள் 5ம் காட்டில் பரவின. ஏசுநாதரைத்தவிர வேறு யாரும் மோட்சமடையச் செய்ய இயலாதென்றும், அச் சமயத்தினரைத் தவிர ஏனையோர் அஞ்ஞானிகள் ஆவர் என்றும் கிறித்தவ சமயத்தினர் இன்று கூறி வருவதை நாம் அறிவோம். அவ்வாறே இசுலாமிய சமயத் தினர், கலிமாச் செல்பவர்களேத் தவிர ஏனையோர் காபீர்' ஆவர் என்றும், அவர்கள் செய்யும் புண்ணியங்கள் மறு உலகத்தில் அவர்களேச் சேரா என்றும், குர்ஆன் ஒன்றே இறைவனுல் செய்யப்பட்ட நூல் என்றும், அல்லா' ஒருவரே சிறந்த கடவுள் என்றும் கூறுவர். ஆனல் சைவமோ பின்வருமாறு கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/17&oldid=729920" இலிருந்து மீள்விக்கப்பட்டது