பக்கம்:Saiva Nanneri.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தனர்; முகமதியராட்சியைக் குலைத்தனர். அக்காலத்தில் பாண்டியர்கள் சிற்றரசர்களாக வாழ்ந்தனர். அவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலியிலிருந்து தென் பாண்டி நாட்டினே மட்டும் ஆண்டனர். திருநெல்வேலிப் பாண்டி யரில் 16-ஆம் நூற்ருண்டில் ஆட்சி புரிந்த அதிவீர பாண்டியரும், இவரது பெரிய தங்தையார் மகன் வரதுங்க ராம பாண்டியரும் குறிப்பிடத் தகுந்தோராவர். இருவரும் சிறந்த சைவர்கள். நைடதம், காசி காண்டம், கூர்ம புராணம், இலிங்கபுராணம், வாயு சங்கிதை, வெற்றி வேற்கை என்பன அதிவீரபாண்டியர் இயற்றிய நூல்கள். பிரம்மோத்திர காண்டம், கருவை யந்தாதி, கூர்ம புராணம் முதலியன வரதுங்கராம பாண்டியரியற் றிய நூல்கள். தென்காசித் திருக்கோயில் திருப்பணிகளே இருவரும் செம்மையுடன் செய்தனர். இவ்விருவர்க்கும் முன்னர் வாழ்ந்த தலைசிறந்த சைவப் புலவர் அருணகிரி யார் ஆவார். அவர் கி. பி. 15-ஆம் நூற்ருண்டில் வாழ்க் கவர்; திருவண்ணமலையில் பிறந்தவர். சிறந்த முருக அடியாராக விளங்கிய இவர் வில்லிபுத்துாராரையும், சம்பந்தாண்டானேயும் வாதில் வென்றவர். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திரு வகுப்புக்கள், மயில் விருத்தம், வேல் விருத்தம் என்பன இவரது நூல்களாகும். இவற்றுள் திருப்புகழ் என்னும் நூல் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத் தலங்க ளின்மீது பாடப்பட்ட திருப்பாடல்களின் தொகுதியாகும். 1300 பாடல்கள் இந் நூலில் காணப்படுகின்றன. திருப் புகழ் சிறந்த சக்தச் சுவடியாகும். அருணகிரியாரின் பாடல்களில் செந்தமிழ் மொழிச் சிறப்பினையும், சிந்தைக் கினிய அன்புச் சுவையினையும், செவிக்கினிய ஓசை நயத் தையும், உளத்தை உருக்கும் திருவருட்டன்மையினையும், காணலாம். தித்திக்கும் திருப்புகழ்ப் பாடல் ஒன்று ேேழ தரப்பட்டுள்ளது. ஏறுமயி லேறிவிளே யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/171&oldid=729922" இலிருந்து மீள்விக்கப்பட்டது