பக்கம்:Saiva Nanneri.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தில் பரவியது. சமயத் தொண்டுகள் புரியப் பல மடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு பதினேழாம் நூற் ருண்டு வரை விசய நகர வேந்தர்கள் தமிழ் நாட்டைச் சமயத் துறையிலும் ஏனைய துறைகளிலும் நன்கு வளரச் செய்து, அதன் நலம் குன்ருவகையில் காத்தோம்பினர். இவர்கள் காலத்தில் பல கோயில்களுக்கு அழகிய மண்ட பங்களும், கட்டிடங்களும் கட்டப்பட்டன. வேலூர்க் கோட்டைக் கோயில் மண்டபம், வரதராசர் கோயில் கலி யாண மண்டபம் ஆகியன இக்காலத்தில் கட்டப்பட்டன. சிதம்பரம் கோயிலில் வடக்குக் கோபுரப் பணியினையும், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில் கோபுரப் பணியினையும் செய்து முடித்தவர் மாமன்னர் கிருட்டினதேவராயர் ஆவார். சிதம்பரம் கோயிலில் ஆயிரக்கால் மண்டபமும், சண்முகர் கோயிலும், மதுரையில் வசந்த மண்டபமும், கோபுரங்களும் இக்காலத்தில்தான் அமைக்கப்பட்டன. மதுரைப் புது மண்டபம் காயக்க மன்னரால் கட்டப்பட்ட தாகும். விசய நகர வேந்தர் காலத்தில் சிற்றம்பலகாடி, இரட்டையர், காளமேகப் புலவர், சிதம்பர புராணம், மதுரைச் சொக்கநாத ருலா ஆகிய நூல்களின் ஆசிரியர் சிதம்பரம் திருமலேநாதர், திருவாரூரில் வாழ்ந்த தத்துவ ராய சுவாமிகள், பாகவதம் பாடிய செவ்வைச் சூடுவார், கச்சிக்கலம்பகம் பாடிய ஞானப் பிரகாசர், சித்தாந்தச் செல்வர் சிதம்பரம் மறைஞான சம்பந்தர், சிவாக்கிரயோகி யார், கமலே ஞானப் பிரகாசர், குருஞான சம்பந்தர் ஆகி யோர் வாழ்ந்து தமிழை வளப்படுத்தினர். இவர்களிற் பெரும்பாலோர் பதிருைம் நூற்ருண்டில் வாழ்ந்தவராவர். பதினேழாம் நூற்ருண்டில் இரேவண சித்தர், ஆனந்த நமசிவாயப் பண்டாரம் முதலியோர் வாழ்ந்தனர். தாயு மான வரும் இக்காலத்தவரே. தாயுமானவர் சைவ வேளாளர் ; வேதாரண்யம் கேடி லியப்ப பிள்ளேயின் திருமகளுர், மெளன குருவின் மான வர் திரிசிரபுர விசயரகுநாதசொக்கலிங்க நாயகரிடம் அரசியல் அலுவலராகப் பணியாற்றியவர் ; சில காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/173&oldid=729924" இலிருந்து மீள்விக்கப்பட்டது