பக்கம்:Saiva Nanneri.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை முத லிய நூல்களே இயற்றிய அந்தகக்கவி வீரராகவ முதலியா ரும் இக்காலத்தவரே. பதிருைம் நாற்ருண்டில் வாழ்ந்த இரேவண சித்தரும் சைவ வேளாளரே. பேரளத்தில் பிறந்து சிதம்பரத்திலும் சென்னேயிலும் வாழ்ந்த இவர் பட்டீசுரப் புராணம், திருவலஞ் சுழிப்புராணம், திருமேற் றளிப் புராணம் முதலிய நால்களேப்பாடியுள்ளார். இவ்விருண்ட காலத்தில்தான் மேலேகாட்டார் நம் நாட்டு மண்ணில் கால் வைத்தனர். இறுதியில் ஆங்கிலே யரே நம்நாடு முழுவதையும் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப் பைப் பெற்றனர். பதினெட்டாம் நாற்ருண்டே ஆங்கி லேயரை நமது காட்டில் ஊன்ற வைத்த நூற்ருண்டு ஆகும், இந்நூற்ருண்டில் திருக்கடவூர் தேவியான அபி ராமி அம்மையார் மீது அபிராமி அந்தாதி பாடிய அபிரா மிப்பட்டர், அறப்பளிசுர சதக ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர், கோழித்தலபுராணம், சீகாழிக்கோவை, இரா மாயண நாடகம், கீர்த்தனே முதலிய நால்களேப் படிய அருணுசலக் கவிராயர், திருக்கு ற்ருலக்குறவஞ்சி ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர், திருப்பாதிரிப் புலியூர்ப்புரா னம் பாடிய சிதம்பரநாத முனிவர், சிவ ரகசியம் என்னும் நாலே எழுதிய ஒப்பிலாமணிப் புலவர், கடவுள் மாமுனிவர், ஒழிவில் ஒடுக்கம், சித்தாந்த தரிசனம் முதலிய நால்களே ப் பாடிய சிர்காழிச் சைவத்துறவி கண்ணுடை வள்ளலார், விநாயக புராணம், தணிகை புராணம், காஞ்சிப் புராணத் தின் இரண்டாம் காண்டம், பேரூர்ப் புராணம் முதலிய நூல்களே இயற்றிய சிவஞான முனிவரின் மாணவர் திருத் தனிகைக் கச்சியப்ப முனிவர் முதலிய புலவர்கள் வாழ்ந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தனர். பத்தொன்பதாம் நூற்ருண்டில்வாழ்ந்ததிரிசிரபுரம்மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம் பிள்ளை சிறந்த சிவநேசச் செல்வராவார். அவர் பாடியுள்ள தலபுராணங்களும் பிரபந்தங்களும் அளவிடற் கரியனவாகும். திருவாவடுதுறை ஆதீனப் புலவராக விளங் கிய இவர் இயற்றிய நூல்களில் சேக்கிழார் பிள்ளேத்தமிழ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/175&oldid=729926" இலிருந்து மீள்விக்கப்பட்டது