பக்கம்:Saiva Nanneri.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சைவ மடங்களின் சமயத் தொண்டு சைவசமயக் கொள்கை, ஒழுக்கம் ஆகியன மக்களி டையே நிலவும் பொருட்டுச் சைவ நால்களில் புலமையும் சைவ ஒழுக்கமும் துறவு உள்ளமும் கொண்ட பெரியோர் களேத் தலைவராக கிறுத்தி அவர்கட்கு வேண்டிய இடமும் பொருளும் கல்கி, இடங்கட்கு மடம் என்ற பெயர் தந்து சமயத்தை வளர்க்குமாறு இடைக்காலத்தில் வாழ்ந்த மன் னர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். கி. பி. 10,11,13-ஆம் நாற்ருண்டுகளில் மத்தமயூர் சந்தானத்தின் தென்கிளே யாய்ப் போங் த கோளகி சந்தானம் சைவ சமயத்துக்காகப் பணிபுரிந்திருக்கிறது. கோளகி சக்தானத்துக்குத் தபதி முக முழுதும் பலவிடங்களில் மடங்கள் இருந்துள்ளன. கோளகி சந்தானத்தின் வாயிலாகச் சோமசம்புபத்ததி (ஞானமிர்த முகவுரை), ஞானமிர்தம் ஆகிய நூல்கள் வெளிவந்தன. கி. பி. 13ஆம் நாற்ருண்டில் சிவஞான போதம் எழுதிய மெய்கண்ட தேவர் பெயரால் தமிழ் நாட் டின் பல்வேறிடங்களில் மடங்கள் தோன்றியுள்ளன. இவற்றுக்கு முன் ஞானசம்பந்தர், காவுக்கரசர், சுந்தரர் இவர்கள் பெயரால் பல மடங்கள் தோன்றிச் சிவத் தொண்டு புரிந்துள்ளன. இன்றைய மடங்களில் தலைமை யானது, தமிழ்த் தொண்டால் தொன்மைச் சிறப் புடையது திருவாவடுதுறை மடமாகும். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் சித்தர், சிவப்பிரகாசர் ஆகியோரின் மாணவரான வைத்தியநாதர் என்பவர் நமச்சிவாயர் என் லும் தீட்சை காமம் பெற்றுத் திருவாவடுதுறையில் சைவ ஆதினத்தை கிறுவினர். கைலாயத்திலுள்ள சிவன் முத லாக கந்திபெருமான் முதல் மெய்கண்டார் வரை தெய்வ பரம்பரை எனவும் மெய்கண்டார் முதல் நமசிவாய தேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/178&oldid=729929" இலிருந்து மீள்விக்கப்பட்டது